தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிக்கு பரிட்சையமானவர் கங்கனா ரணாவத். இவர் தன் அசைக்க முடியாத நடிப்புத் திறமையால் பாலிவுட்டின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவரானார்.
நடிகை கங்கனா ரணாவத் பலகட்ட போராட்டத்திற்குப் பின், தனது இயக்கத்தில் உருவாகியுள்ள எமெர்ஜென்சி திரைப்படத்தை வெளியிட உள்ளார். இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாப்பாத்திரத்திலும் இவரே நடித்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து வெகுநாட்கள் ஆகியும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால், திரைக்கு வராமலே உள்ளது.
சமீபத்தில் அரசியலில் களம் கண்டு வரும் இவர், தன்னுடைய சிறந்த படைப்பை எப்படியாவது வெளியிட்டே ஆகவேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார். ஆனால், உண்மை சம்பவத்தை அடிப்படையாக எடுக்கப்பட்ட எமெர்ஜென்சி படத்தில் மத நம்பிக்கை குலைக்கும் விதமாகவும் வன்முறையைத் தூண்டும் விதமாகவும், குறிப்பாக சீக்கியர்கள் குறித்து தவறான சித்தரிப்புகள் உள்ளதாகக் கூறி தணிக்கை வாரியம் 13 இடங்களில் திருத்தம் கூறியுள்ளது.
ஆனால், இப்படத்தின் இயக்குநர் கங்கனாவோ, இந்தப் படத்தில் உள்ள அனைத்து காட்சிகளும் உண்மையானவை. தணிக்கை வாரியத்தின் கருத்து நியாயமற்றதாக உள்ளது. பல வரலாற்று ஆய்வாளர்கள் படத்தை பாராட்டிய பின்னரும், படத்தின் காட்சிகளை நீக்கவும், திருத்தம் செய்யவும் கூறி தணிக்கை வாரியம் நிர்பந்திக்கிறது.” என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த, தணிக்கை வாரியம்,சீக்கியர்கள் அல்லாதவர்களை சீக்கியர்கள் துப்பாக்கியால் சுடும் காட்சியை அகற்றுமாறு கூறியுள்ளோம். இது நிச்சயமாக வன்முறையை தூண்டும். அதனால், இந்த காட்சிகளை நீக்கினால் மட்டுமே யு எ சான்றிதழ் அளிப்போம் என்று கறாராக சொல்லி விட்டனர்.
இந்த நிலையில், வேறு வழியே இல்லாமல், இதற்க்கு ஒத்துழைப்பு வழங்க முடிவெடுத்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத். மேலும், ஒரு எம்பிக்கே இந்த நிலையா என பலரும் உச்சுக்கொட்டி வருகின்றனர்.