வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சுழற்றி அடிக்கும் கங்குவா காத்து.. குட் பேட் அக்லி படத்திலிருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரபலம்!

Good Bad Ugly: கங்குவா படத்தின் நெகட்டிவ் விமர்சனத்தால் சூர்யாவுக்கு பாலிவுட்டில் 600 கோடி பட்ஜெட் படம் ஒன்று மிஸ் ஆகிவிட்டது என்ற செய்தியை கேட்டிருப்போம். அதே மாதிரி கங்குவா படத்தின் முக்கிய பிரபலம் ஒருவர் அஜித் நடித்த கொண்டிருக்கும் குட் பேட் அக்லி படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெறவில்லை. தொடர்ந்து படத்தின் மீதான எதிர்மறையான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

குட் பேட் அக்லி படத்திலிருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரபலம்!

போதாத குறைக்கு ஜோதிகா ஒரு அறிக்கை விட்டு மொத்தமாக எல்லாத்தையும் கெடுத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் பாலிவுட் திரையுலகில் நேரடி ஹீரோவாக சூர்யா கர்ணா படத்தின் மூலம் களத்தில் இறங்க ரெடியாக இருந்தார்.

ஆனால் இப்போதைக்கு இந்த படம் வேலைக்கு ஆகாது என படத்தின் வேலைகளை கைவிட்டு விட்டார்கள். கங்குவா படத்தின் முதல் நெகட்டிவ் விமர்சனமே பின்னணி இசை தான். நடித்த ஹீரோக்கு இந்த நிலைமை தான் இசையமைப்பாளர் சும்மாவா விடுவாங்க.

குட் பேட் அக்லி படத்தில் ஒப்பந்தமாகி இருந்த தேவி ஸ்ரீ பிரசாத்தை அந்த படத்தில் இருந்து நீக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் சில தகவல்கள் கங்குவார் படத்தால் இந்த நீக்கம் நடைபெறவில்லை.

தெலுங்கில் பாலையா படத்திற்கு போட்ட ட்யூனை அப்படியே மாற்றி இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்திருக்கிறார். இது ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிடிக்காத காரணத்தால் அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Trending News