கங்குவா படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் அப்படம் பற்றியும், சூர்யா குறித்தும் மிஸ்கின் கருத்து தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா. இப்படம் ரிலீசான முதல் நாளே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
பல கோடிகள் செலவு செய்து பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம். ஆனால், வி.எப்.எக்ச், ஒலியமைப்பு, திரைக்கதை, கதை ஆகியவை பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எதிர்பார்த்த 2000 கோடி வசூல் குவியவில்லை.
இந்த விவகாரம் பேசுபொருளானது, கங்குவா படத்தை தொடர்ந்து ட்ரோல் செய்தனர் நெட்டிசன்ஸ். ரசிகர்களும் கிண்டல் செய்து எதிர்மறை விமர்சனத்தை பதிவு செய்தனர்.
ஆனால், ஜோதிகா, மாதவன், சூரி, சுசீந்தரன் உள்ளிட்ட கலைஞர்கள் இப்படத்தை பாராட்டிய நிலையில் இயக்குனர் மிஸ்கினும் ஒரு விழாவில், சூர்யா மற்றும் கங்குவா படம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
கருணையோடு விமர்சனம் செய்ய வேண்டும் – மிஸ்கின்
அதில் ஒரு படம் நல்லா இல்லாத போது மக்களுக்கு கோபம் வருது. தியேட்டரில் படம் பார்த்த சரியில்லாததால், அவர்களிடம் கேமராவை காட்டும்போது, சிலர் தவறான வார்த்தைகள் பயன்படுத்தினர்.
அதைக் கேட்டு மனம் வருந்ததமாக உள்ளது. கங்குவா படத்தை நான் பார்க்கவில்லை. அப்படம் மீது விமர்சனம் வந்தது. அதை கருணையோடு பார்க்கனும்.
சூர்யா போன்ற அழகான, நல்ல நடிகரை பத்திரமா பார்த்துக்கனும். இதை நான் சொல்வதால், சூர்யாவுக்கு கதை சொல்லப் போறீங்களான்னு என் மேல் விமர்சனம் வரலாம். இப்போது நம்மிடம் சிவாஜி, எம்.ஜி.ஆர் இல்லை.
ஆனால், அவர்களோடு பணியாற்றிய சிவக்குமார் நம்மிடம் உள்ளார். அவர்கள் வீட்டில் சூர்யா, கார்த்தி உள்ளனர்.
உண்மையில் நான் சூர்யாவுக்கு கதை சொல்லப் போவதில்லை. அவர்கள் பணம் கொடுத்தாலும் வாங்கப் போவதில்லை.
கலைஞர்களுக்கு கைதட்ட வேண்டும், சினிமா கலைஞர்களுக்கு காசு வேண்டும். அதுக்கான படம் எடுக்கிறோம், ஒரு படத்தில் நியாயமும் தர்மமும் இருக்கும் பட்சத்தில் நன்றாக இருக்கும், இதை மக்களும் எதிர்பார்க்கின்றனர்.