Kanguva: சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் கங்குவா இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வருட கணக்கில் உருவான இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அதே தேதியில் தான் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படமும் வெளியாகிறது. அதனாலயே இப்போது ஒட்டுமொத்த மீடியாக்களும் பரபரப்புடன் அந்த நாளை எதிர்பார்த்து வருகின்றன.
இந்நிலையில் கங்குவா படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது. அதன்படி பாடலாசிரியர் விவேகா படத்தை பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மேலும் இந்திய சினிமாவின் பெருமைமிகு பிரம்மாண்டம். இயக்குனர் சிவா நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்று விடுவார். சூர்யா சாரின் நடிப்பு பிரமாதம். கங்குவா படத்தை பார்த்து மெய் சிலிர்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கங்குவா முதல் விமர்சனம்
தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த விமர்சனம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இப்படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அதன்படி 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் கங்குவா படத்தின் பிரீ பிஸ்னஸ் மட்டுமே 500 கோடியை தாண்டி இருக்கிறது. அதன்படி இதன் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் 80 கோடிகள் கொடுத்து கைப்பற்றி இருக்கிறது.
அதேபோல் ஹிந்தியில் சாட்டிலைட், டிஜிட்டல், தியேட்டர் உரிமம் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. இப்படி போட்ட பட்ஜெட்டை தாண்டி வியாபாரம் ஆகி இருக்கும் கங்குவா இந்திய சினிமாவில் ஒரு புது சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
புது சாதனை படைக்க வரும் கங்குவா
- கங்குவா ரிலீஸ் தள்ளிப் போக இதுதான் காரணம்
- கங்குவா கொடுத்த ஆஃபரை தூக்கி எறிந்த அயன் லேடி
- ஹாலிவுட் தரத்தில் அஜித்துடன் மோத தயாராகும் கங்குவா