பட்ஜெட்டை தாண்டி பல கோடிகள் இழுத்து விட்ட கங்குவா.. சிறுத்தை சிவா பெயருக்கு ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் படம்

Kanguva movie which grossed crores beyond the budget: குடும்பப் பாங்கான சென்டிமென்ட் கதைகளை கையில் எடுத்து அதில் சரிபங்கு ஆக்சன் கலந்து திரைக்கதையை விறுவிறுப்பாக்கி தனது படங்களை வெற்றி பெற செய்பவர் சிறுத்தை சிவா.

தமிழ் சினிமாவின் அக்மார்க் வெற்றி இயக்குனராக வலம் வரும் சிறுத்தை சிவா, தற்போது ஸ்டூடியோகிரின் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சூர்யாவுடனான கூட்டணியில் கங்குவாவை ரெடி பண்ணி உள்ளார்.

இந்தியாவின் பல மொழிகளிலும் ரெடியாகியுள்ள கங்குவாவை காண இந்திய திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

சரித்திரத்தை பின்புலமாக கொண்டு தனித்துவமான ஆக்சன் காட்சிகளுடன் ரெடியாகி உள்ள கங்குவாவில் சூர்யாவுடன் தீஷா பதானி மற்றும் பாலிவுட் வில்லன் பாபி தியோல் இணைந்து உள்ளனர். 

எப்போது ரிலீஸ் ஆகும் என்பது போல் படத்தின் டிரெய்லரிலேயே மிரட்டும் வகையில் விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன், முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் மிரட்டும் வகையில் அமைந்து ஹைப்பை எகிற வைத்துள்ளது கங்குவா.

கங்குவா பட குழுவினருக்கு அதிரடி உத்தரவு போட்ட சூர்யா

படப்பிடிப்பு முடிந்து விஎஃப்எக்ஸ் காட்சிகள் மேம்படுத்தப்பட்டு படம் ரிலீசுக்கு தயாரான நிலையில், சூர்யா இதனைப் பார்த்துவிட்டு படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சரிவர அமையவில்லை என்று குறைபட்டுக் கொண்டார்.

காட்சிகளை மேம்படுத்தாமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என உத்தரவும் போடப்பட்டது. ஏற்கனவே படப்பிடிப்பிலேயே பட்ஜெட்டுக்கு மேல் செலவு செய்து தயாரிப்பாளரை விழிப்பிதுங்க வைத்த நிலையில்,

விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கும் அதிக செலவை இழுத்து விடுகிறார் என்று  சிறுத்தை சிவாவின் மீது குறை சொல்லி வருகிறது தயாரிப்பு நிறுவனம். 

இதன் தாமதத்தால் பாலிவுட்டில் ரன்வீர் கபூர் மற்றும் வருண் தவானை வைத்து இயக்க உள்ள திரைப்படமும் தள்ளி கொண்டே செல்கிறது என புலம்பி வருகிறார் சிறுத்தை சிவா.

இறுதியாக ஆகஸ்ட் மாதம் சர்வதேச தரத்துடன் பல மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் கங்குவா படக்குழுவினர்.