திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நடிகையின் வயதை பாடலில் சொன்ன கண்ணதாசன்.. கவிஞரால் ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை

தமிழ் சினிமாவில் எப்படி ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவம் உண்டோ அதேபோல் தான் பாடலாசிரியர்களுக்கும். இந்த பாடலை இவரால் தான் எழுத முடியும் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு கவிஞர்கள் ஒவ்வொரு விதத்திலும் தங்களுடைய சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். இந்த கவிஞர்களில் தலைசிறந்த மூத்த கவிஞர் தான் கண்ணதாசன்.

கவிஞர் கண்ணதாசன் கிட்டதட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். புதிதாக காதலிப்பவர்களாக இருக்கட்டும், காதலில் தோல்வியுற்றவர்களாக இருக்கட்டும், குடும்ப பிரச்சனையில் சிக்கிக் கொண்டவர்களாக இருக்கட்டும், இதுபோன்று நம் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும், சந்தோஷங்களுக்கும் ஏற்ற பாடல்களை கண்ணதாசன் அவர்கள் எழுதியிருக்கிறார்.

Also Read:குடிபோதையில் சொத்தை அளித்தாரா கண்ணதாசன்? ஆவேசத்தில் உண்மையை உடைத்த வாரிசு!

கவிஞர் கண்ணதாசன் கற்பனைகளைத் தாண்டி அவரை சுற்றி நடக்கும் விஷயங்களையும், அவர் வாழ்க்கையில் நடக்கும் தனிப்பட்ட விஷயங்களை அப்படியே தன்னுடைய பாடல் வரிகளில் கொண்டு வந்து விடுவார். இவரின் பாடல்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு பிடிக்குமோ, அதே அளவுக்கு அந்தப் பாடலின் பின்னால் இருக்கும் உண்மை கதையும் அவ்வளவு பிடிக்கும்.

அவர் எழுதிய ஒவ்வொரு பாடல்களுக்கும் பின்னால் இருக்கும் உண்மை கதையை இன்று வரை அவருடன் பணிபுரிந்தவர்கள் சொல்லி வருகிறார்கள். இதில் பல விஷயங்கள் நிஜமாகவே ரொம்பவும் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பாடலின் கதை தான் தற்போது வெளியாகி இருக்கிறது. எப்போதுமே ஹீரோக்களையும், இசையமைப்பாளர்களையும் சீண்டிப் பார்க்கும் கண்ணதாசன் இந்தப் பாடலில் ஹீரோயினை பற்றி எழுதியிருக்கிறார்.

Also Read:அறிஞர் அண்ணாவுக்கு பாடல் வரிகளின் மூலம் கேட்ட கேள்வி.. கண்ணதாசனின் அசாத்திய திறமை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த அன்னை இல்லம் திரைப்படத்தில் அவர் தன்னுடைய காதலியான தேவிகாவை நினைத்து பாடுவது போல் ஒரு பாடல் அமைந்திருக்கும். எண்ணிரண்டு 16 வயது எனத் தொடங்கும் இந்தப் பாடல் அந்த காலத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்தப் பாடல் வரியை கேட்ட இயக்குனரும் இசையமைப்பாளரும் தேவிகாவை பார்த்தால் உங்களுக்கு 16 வயது பெண் போலவா தெரிகிறது என்று நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு கவிஞர் நன்றாக கேளுங்கள் எண்ணிரண்டு பதினாறு என்று நான் எழுதி இருக்கிறேன். இரண்டு 16, 32 அல்லவா என்று கேட்டு சிரித்திருக்கிறார். உண்மையில் தேவிகா இந்த படத்தில் நடிக்கும் பொழுது அவருக்கு 32 வயது தானாம். பொதுவாக நடிகைகள் தங்களுடைய வயதை வெளியில் சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் இப்படி ஒரு பாட்டை எழுதி தேவிகாவை சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறார் கவிஞர்.

Also Read:என்னை போய் இப்படி நடிக்க சொல்றீங்களே.. கண்ணதாசனிடம் ஆவேசப்பட்டு அழுத மனோரம்மா!

Trending News