சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

மயங்கி விழுந்த கண்ணம்மா.. கடுப்பில் கண்டபடி திட்டிய பாரதி

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் பல போராட்டங்களுக்கு பின்பு பாரதி சக்தி என்ற குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதற்கு உறுதுணையாக இருந்தது கண்ணம்மா என்று செய்தியாளர்கள் முன் பாரதி கூறுகிறார்.

இதை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்த சௌந்தர்யா மனசுக்குள்ள எவ்வளவு பாசம் வச்சிக்கிட்டு வெளியில் பாரதி நடிக்கிறானே என வருத்தப்படுகிறார். இந்நிலையில் மருத்துவமனையிலேயே கண்ணம்மா மயங்கிக் கீழே விழுகிறாள். உடனே பாரதிகண்ணம்மா முகத்தில் தண்ணீர் தெளித்துகிறார்.

கண்விழித்து பார்த்த கண்ணம்மா நேற்று இரவில் இருந்த சாப்பிடாமல் இருந்ததனால் தான் மயங்கி விழுந்தேன் எனக் கூறுகிறாள். இதைக்கேட்டு கடுப்பில் கண்ணம்மாவை திட்டி தீர்க்கிறார் பாரதி. இதுவே எல்லார் முன்னாடியும் விழுந்த, யாரும் இல்லாத இடத்துல எங்கேயாவது மயங்கி விழுந்த இருந்தா என்ன பண்றது.

உனக்கு உன்னை பத்தியும் கவலை இல்லை, சுத்தி இருக்கறவங்க பத்தியும் கவலை இல்லை. ஆப்ரேஷன் முக்கியமோ அதே அளவுக்கு நம்மளையும் பார்த்துக்கணும். இவ்வாறு கண்ணம்மாவை திட்டிவிட்டு, நர்சிடம் ஒரு ஜூஸ் எடுத்துட்டு வாங்க என பாரதி கூறுகிறார்.

மனுஷன் என்னதான் கண்ணாமா மேல கோவமா ஆக இருந்தாலும் கண்ணம்மாவின் உடல்நிலையில் ஏதாவது பிரச்சனை வந்தால் ஒவ்வொரு முறையும் பாரதிதான் வந்து காப்பாற்றுகிறார். இவ்வளவு பண்ணாலும் கண்ணம்மா நடத்தை கெட்டவன் தான் சொல்லிக்கிட்டு இருக்காரு.

மேலும் இதெல்லாம் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரம், கண்ணமா மேல பாரதி இவ்வளவு அன்பு வச்சுக்கிட்டு ஏன் இப்படி நடந்துகிறார் என்ற யோசனையில் உள்ளார். இந்நிலையில் பாரதி, கண்ணம்மாவை புரிந்துகொள்ள பல சந்தர்ப்பங்களில் வரவுள்ளது.

Trending News