வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தீவிரவாதியிடம் கெத்தாய் பேசி கழுத்தறுத்த கண்ணம்மா.. குளிர்காயும் வெண்பா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியின் மருத்துவமனையை தீவிரவாதிகள் முற்றுகையிட்டுள்ளனர். இதில் கண்ணம்மா உடன் கண்ணம்மாவின் மகள் லஷ்மி, அகிலன், அஞ்சலி என பலர் மாட்டிக் கொண்டுள்ளனர்.

தீவிரவாதிகள் தங்களது 4 கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றினால் மட்டுமே மருத்துவமனையில் இருக்கும் மத்திய அமைச்சர் உள்ளிட்ட அனைவரையும் விடுவிப்பதாக மிரட்டல் விடுகின்றனர். அப்போது கண்ணம்மா மட்டும் தீவிரவாதிகளிடம் தைரியமாக எழுந்து பேசுகிறார்.

Also Read: பீஸ்ட் படத்தை மிஞ்சும் பாரதி கண்ணம்மா

‘உங்களுடைய கோரிக்கை நிறைவேறுதோ இல்லையோ மனிதாபம் இல்லாமல் இப்படி அப்பாவி மக்களை வதைப்பது சரிதானா’ என்று பக்கம் பக்கமாக கண்ணம்மா தீவிரவாதிகளிடம் டயலாக் அடிக்கிறார். உடனே தீவிரவாத கும்பல்களின் தலைவர், நீ டாக்டரா? இல்லத் நர்சா? என்று கேட்க, ‘அதற்கும் மேலே’ என்று கண்ணம்மா கெத்து காட்டுகிறார்.

கண்ணம்மா தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி இருக்கிறார் என்பதை கேட்டதும் வெண்பா சந்தோசத்தில் தலை கால் புரியாமல் ஆடுகிறார். இந்த சந்தோஷத்தை தாங்க முடியாத வெண்பா, எப்படியாவது கண்ணம்மா ஒழிந்து விட வேண்டும் என்றும் எண்ணுகிறார்.

Also Read: வருங்கால மனைவியுடன் செல்பி வெளியிட்ட பாரதி

இருப்பினும் மருத்துவமனையில் இருப்பவர்களை காப்பாற்றுவதற்காக பாரதி மற்றும் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் முயற்சி செய்கின்றனர். வாரத்திற்கு ஏதாவது ஒரு சினிமா படத்தை எடுத்து போட்டி காண்பித்துக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா, இந்த முறை தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை அப்படியே காப்பியடித்திருக்கிறது.

கதையை கிடைக்காமல் சீரியலின் இயக்குனர் ஏதேதோ கதையை மாற்றி விறுவிறுப்பை கூட்டுவதற்காக செய்கின்ற வேலையை நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர். இதை வைத்தே இன்னும் இரண்டு வாரத்திற்கு பாரதிகண்ணம்மா சீரியலை ஓட்டுவிடுவார்கள்.

Also Read: சத்தம் இல்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த டாக்டர் பாரதி

Trending News