வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அரண்டு போன சௌந்தர்யா.. அதிரடி முடிவெடுத்த சமையலம்மா

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒன்பது வருடங்களாக தன்னுடைய அப்பா யார் என்பதை தெரிந்துகொள்ள கண்ணம்மாவிடம் வளரும் லஷ்மி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் லஷ்மி கடந்த சில நாட்களாகவே அப்பாவை கண்டுபிடிப்பதில் முழு முயற்சியை செலுத்தி அதற்காக தன்னைப் பெற்று வளர்த்த அம்மாவைக் கூட எதிர்க்கத் துணிந்து விட்டாள்.

எனவே இவ்வளவு நாள் லஷ்மிக்கு அப்பா யார் என்பதை சொன்னால், அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்குமோ இருக்காதோ என கண்ணம்மா நினைத்துக் கொண்டிருந்த நிலையில், லஷ்மியின் துடிப்பான பேச்சும் தன்னுடைய அப்பாவை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ஆணித்தரமாக இருப்பதால் இதுதான் சரியான சமயம் என கண்ணம்மா பாரதியைப் பற்றிய உண்மையை சொல்ல போகிறாள்.

ஆகையால் சௌந்தர்யாவின் குடும்பத்தினரிடம், நான் லஷ்மியிடம் எல்லா உண்மையையும் தெரியப்படுத்தப் போகிறேன் என பாரதி உட்பட அங்கிருக்கும் அனைவருக்கும், இனி கண்ணம்மா என்ன செய்ய போகிறாள் என்பதை தெரியப்படுத்துகிறாள்.

இருப்பினும் பாரதி, லஷ்மிக்கு யார் அப்பா என்பதை கண்ணம்மா சொல்லிவிட்டால் லட்சுமியிடம் என்ன சொல்வது என்றும், நான் உன்னுடைய அப்பா இல்லை என்பதை எப்படி மூஞ்சியில் அடித்தால் போல் சொல்வது என்பதை யோசிக்கிறாள்.

இருப்பினும் கண்ணம்மாவுக்கு லஷ்மியிடம் பாரதி, அவளுடைய மனம் கஷ்டப்படும் அளவுக்கு ஏதாவது பேசி விடுவார் என்று இவ்வளவு நாள் பயந்து கொண்டிருந்த நிலையில் கண்ணம்மாவின் இந்த அதிரடி முடிவு சீரியலில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்த உள்ளது.

மேலும் இதுபோன்ற சூழ்நிலை பாரதி கண்ணம்மா சீரியலில் பலமுறை நடந்தாலும் சீரியல் இயக்குனர் ஏதாவது ஒன்றை செய்து மொக்கை ஆக்கி விடுவார். அதே போன்றே இந்த முறையும் நடக்குமா இல்லையா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News