சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

ஆம்புலன்சை விட விரைந்து செயல்பட்ட கண்ணம்மா.. கடைசி நேரத்தில் கழட்டிவிட்ட பாரதி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் தற்போது ஆயிஷா என்ற இறந்த குழந்தையின் இதயத்தை எடுத்து சக்தி என்ற குழந்தைக்கு பொருத்தப்பட உள்ளது. தற்போது புயல்காற்று இருப்பதால் ட்ரோனில் இதயத்தை எடுத்து செல்ல முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாரதி என்ன செய்வதென்று தெரியாமல் டென்ஷன் ஆக இருக்கிறார். அப்போது கண்ணம்மா ஆபரேஷன் முடிந்து விட்டதா என்று வந்து கேட்கிறாள். உடனே பாரதி நாங்க தான பேசிட்டு இருக்கோம் இப்ப நீ வந்து நடுவுல என்ன சொல்ல வர என்ன திட்டுகிறார்.

நான் எது கேட்டாலும் அதுல ஒரு காரணம் இருக்குனு உங்களுக்கு தெரியாதா என கண்ணம்மா பாரதியிடம் கூறுகிறார். அதாவது இதயத்தை ஆம்புலன்சில் எடுத்துச் செல்ல எல்லா ஏற்பாடுகளையும் கண்ணம்மா செய்துள்ளார். இதனால் உடனே பாரதி இதயத்தைச் சென்னையை எடுத்துச்செல்ல ஆம்புலன்சில் ஏறுகிறார்.

அப்போது கண்ணம்மாவும் அந்த ஆம்புலன்சில் ஏற முற்படும்போது பாரதியுடன் இருக்கும் கணேசன் கண்ணம்மாவை ஏறவிடாமல் தடுத்து நிறுத்துகிறார். அதற்கு பாரதியும் எதுவும் சொல்லாமல் உள்ளார். இது எல்லாமே லைவ்வில் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதைப்பார்த்த சௌந்தர்யா, பாரதி தந்தை எல்லாம் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

மேலும் சக்திக்கு நல்லபடியாக சிகிச்சை நடக்க வேண்டும் என லட்சுமி, ஹேமா இருவரும் கடவுளை பிரார்த்திக்கின்றனர். பாரதி, விக்ரமுக்கு போன் செய்து இதயத்தை எடுத்து வருகிறோம் சக்தியை ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறுகிறார்.

ஆம்புலன்ஸ் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கி விரைந்து செல்கிறது. மேலும் பாரதி கண்டிப்பாக சக்திக்கு இந்த சிகிச்சை நல்ல படிப்பாக முடிக்கயுள்ளார். இவ்வாறு பரபரப்பான கதை களத்துடன் பாரதிகண்ணம்மா தொடர் சென்று கொண்டிருக்கிறது.

Trending News