வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சென்ட்ரல் மினிஸ்டரை வைத்து சீன் போட்ட பாரதி.. சிபிஐ லெவலுக்கு புலன் விசாரணை செய்யும் கண்ணம்மா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி முதன்மை மருத்துவராக பணிபுரியும் விக்ரம் பாபு ஹாஸ்பிடலில் சென்ட்ரல் மினிஸ்டர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவருக்காக ஹாஸ்டலை சுற்றி போலீஸ் பாதுகாப்பும் குவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்ட்ரல் மினிஸ்டரை பணயக் கைதியாக பிடித்து, அரசாங்கத்திடம் தங்களுடைய 4 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரவாதிகள் ஹாஸ்பிடலில் ஏசி சரிப்பார்ப்பவர்களாகவும், பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்ற கெட்டப்பில் ஹாஸ்பிடலில் நுழைகின்றனர்.

Also Read: தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய பாரதிகண்ணம்மா

அங்கு அட்மின் ஆபீஸராக இருக்கும் கண்ணம்மாவிற்கு தீவிரவாதிகள் ஹாஸ்பிடலில் ஊடுருவியதை சிபிஐ லெவலுக்கு புலன் விசாரணை செய்து கண்டுபிடித்து விடுகிறார். இதை போலீசிடம் தெரிவிக்க கண்ணம்மா பதறியடித்து ஓடும்போது தீவிரவாதிகள் ஹாஸ்பிடலை முற்றுகையிட்டு போலீசாரை சுட்டுக் கொல்கின்றனர்.

அங்கு கண்ணம்மா உடன் கண்ணம்மாவின் மகள் லட்சுமி, அகிலன், அஞ்சலி என பாரதியின் குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் மாட்டிக் கொள்கின்றனர். இதை நினைத்து சௌந்தர்யா கலக்கம் அடைகிறார். உடனே பாரதி எப்படியாவது அவர்களை மீட்டு வருகிறேன் என கிளம்புகிறார்.

Also Read: கதை கிடைக்காமல் ஒரே சம்பவத்தை உருட்டும் இயக்குனர்

இதன் பிறகு மருத்துவமனைக்கு உள்ளே இருந்துகொண்டு தீவிரவாதிகளின் கண்ணில் மண்ணைத் தூவி, வெளியிலிருந்து பாரதியின் பிளானுக்கு கண்ணம்மா உதவி செய்யப் போகிறார். இதன்பிறகு தீவிரவாதிகளிடமிருந்து மருத்துவமனையில் இருக்கும் சென்ட்ரல் மினிஸ்டர், பொதுமக்கள் அனைவரையும் காப்பாற்றிய கண்ணம்மா-பாரதி இருவருக்கும் அரசு சார்பில் விருது கொடுப்பார்கள்.

இதை ஏற்கனவே நாகார்ஜுனா நடிப்பில் வெளியான பயணம், தளபதி விஜயின் பீஸ்ட், யோகி பாபுவின் கூர்க்கா போன்ற படத்தில் பார்த்துவிட்ட கதைதான். இவ்வாறு பாரதிகண்ணம்மா சீரியல் இயக்குனர் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு படத்தின் கதையை சீரியலில் திணித்து பித்தலாட்டம் ஆடுவதை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் கிழித்து தொங்க விடுகின்றனர்.

Also Read: பாரதி தலையில் இடியை இறக்கிய வெண்பா

Trending News