வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

வெண்பாவின் மூக்கை உடைத்த கண்ணம்மாவின் மகள்.. நாசுக்காக காய் நகர்த்திய சௌந்தர்யா!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியை கண்ணம்மாவிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில், பாரதியிடம் வளரும் ஹேமாவை மடக்க வெண்பா தற்போது திட்டம் தீட்டி உள்ளார்.

இதற்காக ஹேமாவிடம் அவ்வபோது பாரதியை நன்றாக பார்த்துக்கொள்ள பாரதிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும், அது நானாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என ஹேமா வாயாலே பாரதியை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதம் வாங்க வெண்பா, ஹேமாவை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்.

இதற்காக கண்ணம்மா கொண்டுவரும் மதிய உணவிற்கு பதில் வெண்பாவே ஹேமாவிற்கு பிரியாணி வாங்கிக்கொண்டு சென்று, ஊட்டியும் விடுகிறார். இதனால் கண்ணம்மாவிற்கும் வெண்பா விற்கும் காரசாரமான விவாதம் ஏற்படுகிறது.

அன்று இரவு ஹேமா, வெண்பா கொடுத்த பிரியாணியை சாப்பிட்ட பின்பு தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததால், கண்ணம்மா சாப்பாடு ஆரோக்கியமானது என்றும், வெண்பா குடும்ப வாழ்க்கைக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்றும் சௌந்தர்யா ஹேமாவிற்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார்.

அதன் பிறகு இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மீண்டும் வெண்பா ஹேமாவிற்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி கொண்டு வருகிறாள். ஆனால் ஹேமா அதை சாப்பிட மறுத்து வெண்பாவின் மூக்கு உடைபடும் அளவுக்கு கண்ணம்மா முன்பே எடுத்தெறிந்து பேசுகிறார்.

இவ்வாறு பாரதியை அடையும் நோக்கத்தில் ஹேமாவை பயன்படுத்த போட்ட பிளான் அனைத்தும் வீணாய் போனதே என கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். இதற்கெல்லாம் காரணம் சௌந்தர்யா என்று தெரிந்ததும், அவரை ஒழித்துக் கட்ட வெண்பா வில்லங்கமாக யோசிக்கிறாள்.

Trending News