புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கடன் தொல்லையால் அசிங்கப்பட்ட கண்ணன்.. பொய் பித்தலாட்டம் பண்ணும் ஐஸ்வர்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது கதையே இல்லாமல் ஐஸ்வர்யா கண்ணன் இவர்களை வைத்தே உருட்டி வருகிறார்கள். அதற்கேற்ற மாதிரி இவர்களுடைய நடிப்பை பார்ப்பதற்கும் வெறுப்படைய வைக்கும் அளவிற்கு ஓவராகவே பண்ணுகிறார்கள். எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஐஸ்வர்யா கண்ணன், கடனுக்கு மேல் கடன் வாங்கி அலப்பறையை கூட்டுகிறார்கள்.

இன்றைய எபிசோடு படி மூர்த்தி தூங்காமல் கண்ணனை நினைத்து கவலைப்படுகிறார். பிறகு தனம் எழுந்து மூர்த்தியிடம் கேட்க அதற்கு கண்ணன் ஏதோ ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்ட மாதிரி எனக்கு தோன்றுகிறது என்று சொல்கிறார். உடனே தனம் வெளியில் தான் கோபமாக இருக்கிற மாதிரி நடிக்கிறீங்க. உள்ளுக்குள்ள தம்பிகள் நினைப்புதான் எப்போது இருந்துகிட்டே இருக்கு என்று சொல்கிறார்.

Also read: கோபியின் வயிற்றெரிச்சலும் பொறாமையும்.. பாக்கியா பழனிச்சாமியின் தரமான சம்பவம்

அடுத்து மூர்த்தி, கண்ணன் சமாளித்து விடுவானா வேற ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்ள போறானா என்று ஒரே கவலையாக இருக்கிறது என்று சொல்ல, அதற்கு தனம் அவன் தான் எல்லா ஏற்பாடு பண்ணிக்கிடுவேன் என்று சொல்லிட்டானே. திரும்பி நம்ம ஏதாவது பேசினா தேவையில்லாத பிரச்சினை தான் வரும் மாமா. அதனால் அதை பத்தி எதுவும் யோசிக்காதீங்க நீங்க நிம்மதியா தூங்குங்க என்று மூர்த்திக்கு ஆறுதல் சொல்கிறார்.

அடுத்து மூர்த்தி தூங்கினதும் தனத்துக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கிறது. இதே மாதிரி ஏற்கனவே இவருக்கு ஒரு முறை வந்து இருக்கிறது அப்பொழுதும் யாரிடமும் சொல்லவில்லை. மறுபடியும் நெஞ்சு வலி வருகிறது என்றால் ஏதோ ஒரு பிரச்சனை ஆரம்பமாக போகுது என்று தெரிகிறது. இதைப்பற்றி மூர்த்தியிடம் தனம் சொல்லாமலே மறைத்து விடுகிறார். அடுத்ததாக இந்த கொசு தொல்லை தாங்க முடியல என்று சொல்லும் அளவிற்கு ஐஸ்வர்யாவிடம் கண்ணன் ரொமான்ஸ்க்கு போய் விடுகிறார்.

Also read: டிஆர்பி-யில் தெறிக்கவிடும் முதல் 5 சீரியல்கள்.. சன் டிவியை தூக்கிவிடும் குணசேகரன்

இந்த நேரத்தில் தான் திடீரென்று கண்ணனுக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறார்கள். இதை எதிர்பார்க்காத கண்ணன் ஐஸ்வர்யா அதிர்ச்சியாகி அவர்களிடம் என்ன எதுவுமே சொல்லாம வீட்டுக்குள்ள வந்துட்டீங்க என்று கேட்க, அதற்கு கடனை வாங்கிட்டு வட்டியும் கொடுக்காமல் வீட்டுக்குள் இருந்து ரொமான்ஸ் பண்றவனிடம் இப்படித்தான் வரமுடியும் என்று சொல்கிறார்கள். உடனே கண்ணன் எப்படியோ அவர்களை சமாளித்து இன்னும் இரண்டு நாட்களில் தருகிறேன் என்று அனுப்பி விடுகிறார்.

இதனால் கண்ணன் கொஞ்சம் கவலையாக இருக்க ஐஸ்வர்யா இன்னும் இந்த கஷ்டமெல்லாம் நிச்சயதார்த்தம் வரை தான். அதன் பிறகு நிச்சயதார்த்த வீடியோவை நம்ம சேனலில் போட்டு அதன் மூலம் வரும் பணத்தை வைத்து அவர்கள் மூஞ்சில் தூக்கி எறிந்து விடலாம் நீ எதுவும் கவலைப்படாதே என்று வாய் கூசாமல் சொல்கிறார். அடுத்து இவர்களை தனம் பார்க்க வருகிறார். பிறகு தனம் கண்ணாவிடம் நிச்சயதார்த்தத்துக்கு பணமெல்லாம் வைத்திருக்கிறீர்களா என்று கேட்க அதற்கு ஐஸ்வர்யா பொய் சொல்லி எல்லாத்தையும் மறைத்து விடுகிறார்.

Also read: குடும்பத்தின் முன் கோபியை கலாய்க்கும் பழனிச்சாமி.. ஆவேசத்தின் உச்ச கட்டத்தில் ராதிகா

Trending News