veetuku veedu Vasapadi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில், பார்வதியை எப்படியாவது வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும். அதுவும் சும்மா அனுப்பக்கூடாது இந்த வீட்டுக்கு ஒரு சாபக்கேடான மருமகள் என்ற பட்டத்துடன் அவமானப்பட்டு அசிங்கத்துடன் வெளியே போக வேண்டும் என்று பல்லவி ஒவ்வொரு நிமிடமும் கிடைக்கிற கேப்பில் சதி பண்ணி வருகிறார்.
அந்த வகையில் அத்தையின் மன கஷ்டத்தை போக்கும் விதமாக பார்வதி, அஜய்க்கும் அஞ்சலிக்கும் கல்யாணத்தை நடத்தி வைப்பதற்காக அஞ்சலி வீட்டிற்கு போனார். ஆனால் இதை தெரிந்து கொண்ட பல்லவி மாமனருக்கு மறைமுகமாக தகவலை அனுப்பி அஞ்சலி வீட்டில் ஒரு பிரச்சினையை உண்டுபடுத்தி விட்டார்.
கிடைக்கிற கேப்பில் சதி பண்ணும் பல்லவி
போதாதருக்கு வீட்டிற்கு திரும்பிய பார்வதியை மாமனார் திட்டும்படி கமுக்கமாக இருந்து பல்லவி ஆட்டம் ஆடிவிட்டார். இதனால் துவண்டு போன பார்வதிக்கு அர்ஜுன் ஆறுதலாக பேசினார். இது மட்டுமில்லாமல் இனி ஒவ்வொரு அடியும் பார்வதிக்கு விழுகிற அடி மரண அடியாக தான் இருக்க வேண்டும் என்று பல்லவி பிளான் பண்ணி விட்டார்.
இன்னொரு பக்கம் கண்ணனை வேண்டாம் வெறுப்பாக கல்யாணம் பண்ணிட்டு வந்தாலும் தோழிகள் பார்ட்டிக்கு கூப்பிட்டதும் கண்ணனை கூப்பிட்டு போகிறார். ஆனால் அங்கே போன இடத்தில் கண்ணன் வழக்கம்போல் அவருடைய சேட்டைகளை காட்டி பல்லவியை டென்ஷன் படுத்திவிட்டார். இதனால் உச்சகட்ட கோபத்திற்கு போன பல்லவி, கண்ணன் கண்ணம் பழுக்கும் படி அறைந்து கீழே தள்ளி விடுகிறார்.
ஆனால் இந்த விஷயம் எல்லாம் கண்ணனுக்கு பெருசே கிடையாது. கண்ணன் கொடுக்கும் ஒவ்வொரு குடைச்சலிலும் சிக்கித் தவிக்கும் பல்லவிக்கு தான் ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருக்கப் போகிறது. அந்த வகையில் பல்லவியின் கொட்டத்தை அடக்க கண்ணன் தான் சரியான ஆளு என்பதற்கு ஏற்ப அவருடைய கழுத்தில் தாலியைக் கட்டி மூக்கணாங்கயிறை கையில் சிக்குனு பிடித்து வைத்து விட்டார்.
இனி பல்லவி அந்த குடும்பத்தை ஆட்டிப் படைக்கிறாரோ இல்லையோ, கண்ணன் நல்ல வச்சு செய்யப் போகிறார். இதனை தொடர்ந்து பார்வதி, சாருவிடம் குடும்ப வாழ்க்கையை பற்றி சொல்லி புரிய வைத்து கணவருடன் சேர வைக்கும் விதமாக பேசி சமரசம் பண்ணி விட்டார். இதனால் சாருவின் கணவர், வீட்டிற்கு வந்து சாருவை கூட்டிட்டு போக தயாராகி விட்டார்.
உடனே சாரு போகும் பொழுது பல்லவி உன் வாழ்க்கையில் அவ்ளோ சீக்கிரம் நல்லது நடக்க விட மாட்டேன். போன வேகத்திலேயே உன்னை இந்த வீட்டுக்கு திரும்ப வர வைக்கிறேன் என்று மனதிற்குள்ளேயே திட்டம் தீட்டுகிறார். ஆக மொத்தத்தில் இந்த பல்லவி இடம் மாட்டிக்கொண்டது பார்வதியின் குடும்பம். இருந்தாலும் பல்லவி அர்ஜுன் இருக்கும் வரை ஒற்றுமையாக தான் இருக்கும்.