வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஆக்ரோஷமாக கர்ஜிக்கும் காந்தாரா சாப்டர் ஒன் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.. மிரட்டும் ரிஷப் ஷெட்டி

Kanthara Chapter 1 First Look Video : கடந்த ஆண்டு கன்னட சினிமாவை உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்த படம் தான் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று இருந்தது. மேலும் கேஜிஎஃப் படத்தை தயாரித்து ஹம்பாலே ஃபிலிம்ஸ் தான் இந்த படத்தை தயாரித்திருந்தது.

கன்னட சினிமாவில் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளும் டப் செய்யப்பட்டு வெளியானது. இதை அடுத்து எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 400 கோடியை தாண்டி வசூல் செய்தது.

மேலும் இப்போது ஒரு படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் காந்தாரா சாப்டர் ஒன் படம் உருவாக இருக்கிறது. இந்நிலையில் நவம்பர் 27 ஆம் தேதி ஆன இன்று இந்த படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தின் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது.

Also Read : 100 நாட்கள் ஓடி உண்மையான வெற்றியை ருசித்த நான்கு படங்கள்.. காந்தாரா ரிஷப் ஷெட்டி சொன்ன குட் நியூஸ்

அதில் ரிஷப் செட்டி மிகவும் ஆக்ரோஷமாக கர்ஜிக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. மேலும் ஐந்து மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளதால் அதற்கான போஸ்டர் மற்றும் டைட்டிலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகையால் மீண்டும் காந்தாராவின் ஆட்டம் தொடங்கி இருக்கிறது.

மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உள்ள 15க்கும் அதிகமான பிரபலங்கள் இந்த படத்தில் பங்கு பெற இருக்கிறார்கள். ஆகையால் அடுத்த வருடம் காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News