புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தூங்கு மூஞ்சி அருணை விட கரிகாலன் எவ்வளவோ பெட்டர்.. குணசேகரன் கையில் கிடைத்தால் கொத்துக்கறி தான்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை திருமணத்தை வைத்து இழுத்தாலும் போர் அடிக்காமல் இன்ட்ரஸ்டிங்காக கதை நகர்வதால் அனைவரும் விரும்பி பார்த்து வருகிறார்கள். இந்த திருமணத்தை வைத்து தான் குணசேகரன் மூஞ்சியில் கரியை பூசி அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று முழு முயற்சியும் செய்து வருகிறார் ஜனனி.

இவருக்கு உறுதுணையாக இருந்து அனைத்து உதவிகளையும் அந்த வீட்டில் இருக்கும் மற்ற பெண்கள் ஜனனியுடன் சேர்ந்து துணிச்சலாக எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். ஆனால் கடைசியில் குரங்கு வாலை பிடித்த கதையாக இவர்கள் தோற்கும் நிலைமை ஆகப்போகிறது.

Also read: குணசேகரன் உடம்பில் ஊறிப்போன நக்கல் நையாண்டி பேச்சு.. ட்ரெண்டிங் ஆகும் காமெடி வசனங்கள்

அதாவது கோவிலில் அருண் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் ஆதிரையைத் திருட்டுத்தனமாக கூட்டி வந்து விடுகிறார்கள். ஆனால் அவர் ரொம்ப நேரமாகியும் வராமல் தவிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஜீவானந்தம், அருணை வைத்து பிளான் பண்ணுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

அதற்குள் இந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு ஜனனி இருக்கும் கோயிலுக்கு குணசேகரன் கரிகாலன் மற்றும் அனைவரும் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயமும் ஈஸ்வரி மூலம் ஜனனிக்கு தெரிந்து விடுகிறது. ஆனாலும் மறுபடியும் கௌதமுக்கு போன் பண்ணி கேட்ட பொழுது அருண் மலையில் இருந்து கீழே வந்து விட்டதாக கூறுகிறார்.

Also read: போற போக்க பாத்தா கரிகாலனுக்கு ஆதிரையை கட்டி வச்சிருவாங்க போல.. குணசேகரனிடம் தோற்கப் போகும் ஜனனி

இதை பார்க்கும் பொழுது அருண் வருவாரா அல்லது ஆதிரை திருமணம் கரிகாலனுடன் நடந்திடுமா? என்று பரபரப்பாக கொண்டு வருகிறார்கள். ஆனாலும் ஆதிரைக்கு தூங்கு மூஞ்சி அருணை விட கரிகாலன் ரொம்பவே பெஸ்ட். அதுதான் சொல்வார்களே காதலுக்கு கண்ணில்லை என்று. அது ஆதிரை விஷயத்தில் சரியாகத்தான் பொருந்துகிறது.

ஒருவேளை அருண் மட்டும் வரவில்லை என்றால் ஆதிரை திருமணம் கரிகாலன் உடன் நிச்சயமாக நடந்து விடும். அதன்பின் அந்த வீட்டின் மருமகள்கள் அனைவரும் குணசேகரன் கையில் சிக்கி சின்னா பின்னமாக படாதபாடு பட போகிறார்கள்.

Also read: பாண்டியன் ஸ்டோர்ஸில் அப்பாவை கிழித்து தொங்கவிட்ட மருமகள்.. ஊருக்கே விருந்து வைத்த ஜீவா

Trending News