புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆதிரையை அடைய நாக்கை தொங்க போட்டு அலையும் கரிகாலன்.. புது மாப்பிள்ளைக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், அனைத்தையும் அதட்டி உருட்டி காரியத்தை சாதித்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு வருகிறார் குணசேகரன். கல்யாணத்தை இவர் இஷ்டப்படி நடத்தியதால் ஆதிரை கரிகாலனின் முதல் ராத்திரிக்கும் எல்லாரையும் மிரட்டி செய்து விடலாம் என்று ஏற்பாடு பண்ணி வருகிறார்.

அதிலும் கரிகாலன் எப்ப பார்த்தாலும் ஆதிரையை அடைவதற்கு நாக்கை தொங்க போட்டுக் கொண்டே அழைக்கிறார். அதற்காக எந்த இடத்தில் யார் இருக்காங்க என்று கூட யோசிக்காமல் எப்பொழுதும் இதை பற்றியே நினைப்பில் சுற்றுகிறார். அதிலும் வெட்கமே இல்லாமல் குணசேகரனிடம் உங்களுக்கு எப்படி மாமா நடந்துச்சு என்று கேட்கிறார்.

Also read: ஜான்சி ராணியை வைத்து டிஆர்பி ரேட்டிங்கை கூட்டும் ஜீ தமிழ்.. டபுள் மடங்கு சம்பளத்தை கொடுத்து இழுத்த சீரியல்

அவரும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் எனக்கு எங்க இதெல்லாம் யோசிக்கிற மனநிலையை இல்லை. எப்போதுமே என் குடும்பம் என் தம்பிகளை பற்றி தான் நினைப்பேன் என்று சொல்ல, உடனே கரிகாலன் அப்போ எப்படி மாமா தர்ஷினி, தர்ஷா என்று அறிவாளித்தனமான கேள்வியை கேட்டு குணசேகரனை மடக்கி விடுவார்.

கரிகாலன் பார்ப்பதற்கு கோமாளி மாதிரியாக இருந்தாலும் அந்த விஷயத்தில் உஷாராக தான் இருக்கிறார். எப்படி குணசேகரன் அண்ணனா இருந்து கல்யாணத்தை பண்ணி வைத்தாரோ, அதேபோல் இந்த விஷயத்தையும் நடத்திடலாம் என்று அக்கப்போர்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

Also read: கண்ணனை தண்டித்த நேரத்தில் பிறந்த குழந்தை.. மீண்டும் குவா சத்தம் கேட்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஆனால் இதை தடுப்பதற்காக ஆதிரை எனக்கு இவனை பிடிக்கவே இல்லை மீறி கட்டாயப்படுத்தினால் என்னை நானே தண்டித்துக் கொள்வேன் என்று அனைவரையும் பயமுறுத்தி விடுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியில் கரிகாலன் முழிக்கிறார். அடுத்ததாக ஜனனி இந்த கல்யாணத்தை ஏற்கப் போகிறாயா அல்லது என்ன நினைக்கிறாய் என்று ஆதிரையிடம் கேட்கிறார்.

அதற்கு ஆதிரை நான் அருணை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். இதற்குப் பிறகு ஆதிரை என்ன பண்ணப் போகிறார் என்பது யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. இதற்கு ஒரே வழி இந்த கல்யாணம் செல்லாது என்று மறுப்பு தெரிவித்தால் மட்டுமே இந்த கல்யாணத்தை தடை பண்ண முடியும். இதையாவது உருப்படியா செய்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: செல்லா காசாக நிற்கும் குணசேகரன்.. கௌதமிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்த ஜீவானந்தம்

Trending News