திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பத்து வருஷமா திருப்பி அடித்த கர்மா.. வடிவேலுக்கு இதெல்லாம் பத்தாது என கூறும் பிரபலம்

Actor Vadivelu: தன்னுடைய நகைச்சுவையின் மூலம் அனைவரையும் மகிழ்விக்கும் வடிவேலு நிஜ வாழ்க்கையிலும் அப்படி ஒரு வெள்ளந்தியான மனிதரா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. இவர் குறித்து பல வருடங்களாகவே சர்ச்சையான நம்ப முடியாத செய்திகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது.

அதிலும் அவருடன் இணைந்து நடித்தவர்களே இது போன்ற குற்றச்சாட்டுகளை வைப்பது அதிர்ச்சியை கிளப்பி வருகிறது. அந்த வகையில் நடிகர் சிங்கமுத்து, வடிவேலு குறித்து பல தகவல்களை அவ்வப்போது கூறி வருகிறார். அதில் விஜயகாந்த் பற்றி அவதூறு பேசிய வடிவேலு என்ன ஆனார் என்பது பற்றியும் அவர் கூறியுள்ளார்.

Also read: மாமன்னனுக்காக விட்டுக் கொடுத்த உதயநிதி.. மொத்தமாக தட்டிச் சென்ற வடிவேலு

அதாவது விஜயகாந்த் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட சமயத்தில் வடிவேலு திமுக சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கலைஞர் முன்பாகவே அவர் விஜயகாந்தை தாறுமாறாக பேசியிருந்தார். அதாவது இன்று கட்சி ஆரம்பித்து நாளை கழிச்சு முதல்வராக போகிறீர்களா என்றும் எந்நேரமும் தண்ணிலயே இருப்பவர் கேப்டன் கிடையாது என்றும் பேசி இருந்தார்.

அது மட்டுமல்லாமல் விஜயகாந்த் குறித்த பல விமர்சனங்களை அவர் முன் வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைய தொடங்கியது அனைவருக்கும் தெரியும். இன்னும் சொல்லப்போனால் 10 ஆண்டுகாலம் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

Also read: பொம்பள கமலின் சாம்ராஜ்ஜியத்தை உடைத்த வடிவேலு.. சூழ்ச்சியால் இழந்த பட வாய்ப்பு

விஜயகாந்த் மேல் உள்ள தனிப்பட்ட விரோதத்தை பொதுவெளியில் அவர் பேசியது தான் இந்த நிலைமைக்கு காரணமாக இருக்கிறது. ஏனென்றால் கேப்டன் குறித்து எந்த நடிகர்களும் இதுவரை தவறாக ஒரு விஷயத்தை கூறியது கிடையாது. அதன் காரணமாகவே வடிவேலு பல பிரச்சினைகளுக்கு ஆளானார்.

இனிமேல் வடிவேலுவின் கேரியர் அவ்வளவுதான் என்னும் அளவுக்கு அவர் வாய் துடுக்காக பல விஷயங்களை பேசி இருந்தார். அந்த வகையில் அவர் செய்த ஒரு விஷயம் கர்மாவாக மாறி பத்து வருடங்களாக அவரை சோதித்து பார்த்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இதெல்லாம் வடிவேலுவுக்கு பத்தாது இன்னும் அவர் அனுபவிக்கணும் என்று சிங்கமுத்து வெளிப்படையாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also read: வடிவேலுவின் காமெடிக்காக வெற்றி பெற்ற 6 படங்கள்.. இன்றுவரை ட்ரெண்டில் இருக்கும் நகைச்சுவை

Trending News