வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் 100% கன்னடர்களுக்கு மட்டும் தான் வேலை, வலுக்கும் எதிர்ப்பு.. என்ன செய்ய போகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

Karnataka: அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் என வடிவேலு ஒரு காமெடி சொல்வார். அப்படி ஒரு ‘நச்’ சம்பவத்தை தான் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

இதில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதாவது கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் அவர்களிடத்திலேயே சுகபோக வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான். எப்படி இது சாத்தியம் என்றால், கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் சி மற்றும் டி பிரிவுகளில் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்பதுதான்.

100% கன்னடர்களுக்கு மட்டும் தான் வேலை

மேலும் அந்தக் கம்பெனிகளில் முக்கியமான பதவிகளில் வேலை செய்பவர்களுக்கு கண்டிப்பாக கன்னடம் தெரிந்திருக்க வேண்டும், 15 வருடங்களுக்கு மேலாக கர்நாடகாவில் வசித்திருக்க வேண்டும் என ஏகப்பட்ட கண்டிஷன்கள்.

அது மட்டும் இல்லாமல் இவர்கள் வேலைக்கு எடுக்கும் கன்னடர்களுக்கு ஒரு வேலை அந்த வேலையை பற்றி எதுவுமே தெரியவில்லை என்றால் மூன்று நான்கு மாதங்கள் அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். 100% கன்னடர்களுக்கு வேலை என்ற இந்த மசோதாவுக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டிருக்கிறது.

வேலையில்லா திண்டாட்டம் அந்தந்த மாநிலங்களில் இது போன்ற மசோதாக்களால் குறைய வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் அந்தந்த மாநிலங்களில் தான் வேலை என்றால், உலகமே சுருங்கிவிடும் என்பதுதான் உண்மை.

பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் தான் செயல்படுகின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் இது போன்ற ஒரு மசோதா பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஐடி நிறுவனங்களின் சங்கமான NAASCOM இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது கர்நாடகா அரசு இதிலிருந்து பின்வாங்கி இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News