நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும்‘டேர் டெவில்’படம் குறித்த ஒவ்வொரு தகவலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.‘குட் பேட் அக்லி’படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளதால்,இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஷாலினி அஜித்குமார் தனது பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த நவம்பர் 2ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.இதில் ஸ்ரீலீலா,உன்னி முகுந்தன்,பிரபு, பார்த்திபன்,சுனில்,ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும்,கன்னட நடிகர் சிவராஜ்குமார் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் மற்றொரு முக்கியப் பிரபலம் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அதாவது,கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ‘டேர் டெவில்’படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.அரசியலில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் அஜித்தின் படத்தில் தோன்றவுள்ளதாகப் பரவும் இந்தத் தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இருப்பினும்,டி.கே.சிவகுமார் இப்படத்தில் நடிப்பது குறித்து படக்குழுவிடமிருந்தோ அல்லது அவரிடமிருந்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.இதனால் இந்தச் செய்தி உண்மையாகுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.விரைவில் இதுகுறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.




