Karthi and Suriya in kanguva: அக்டோபர் 10ஆம் தேதி வெளிவருகிறது கங்குவா படம். கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிறது. மலையாளம், ஹிந்தி, கன்னடம் என கிட்டத்தட்ட 38 மொழிகளில் வெளிவர இருக்கிறது இதுவரை தமிழ் சினிமா செய்யாத சாதனை இது.
400 கோடி பட்ஜெட் என்றால் இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கலாம் என முடிவு செய்துள்ளது பட குழு. ஆறு மாத காலமாக முதல் பாகம் எடுத்து வருகிறார்கள். இரண்டாம் பாகம் 2026 ஆம் ஆண்டுக்குள் ரெடியாகி விடுவதாகவும் அந்த படம் கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
கங்குவா படத்தில் நிறைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் இருக்கிறதாம். படத்தில் முக்காவாசி காட்சிகள் சிஜி ஒர்க் தானாம்.இதனால் முழு திருப்தி வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் சிறுத்தை சிவா பார்த்து பார்த்து செய்து வருகிறார். இதற்காக வெளிநாடுகளில் இருந்து உள்நாடு வரை திறமையான ஆட்களிடம் வேலை வாங்கி வருகிறாராம்.
செகண்ட் பார்ட்டில் அசுரத்தனம் காட்டும் கைதி டெல்லி
இந்த படத்தில் முக்கியமான வில்லனாக பாலிவுட் புகழ் பாபி தியோல் நடிக்கிறார். இந்த படத்திற்காக தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து வருகிறார் பாபி தியோல். ஹீரோ சூர்யாவின் டெடிகேஷன் வியப்பாக இருக்கிறது என்று செல்லும் இடமெல்லாம் கூறி வருகிறாராம்.
கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யாவின் தம்பி கார்த்தி வில்லனாக நடிக்கிறாராம். இவரை இரண்டாம் பாகத்தில் பாபி டியோலின் மகனாக கனெக்ட் செய்கிறார்களாம். அவரது இரண்டாம் மனைவியின் மகனாக வந்து சூர்யாவை எதிர்த்து சண்டையிடும் கதாபாத்திரம்.
- கங்குவா கிளைமேக்ஸ் காட்சியில் சிறுத்தை சிவா வைத்த ட்விஸ்ட்
- கங்குவா கொடுத்த ஆஃபரை தூக்கி எறிந்த அயன் லேடி
- Kanguva Review – வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் கங்குவா