சூர்யா செய்ததை செய்யாமல் கோட்டை விட்ட கார்த்தி.. உயிரைப் பறித்த அஜாக்கிரதை

சர்தார் 2 படம் பிரசாத் லேபில் ஜூலை 15ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதை பி எஸ் மித்ரன் இயக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சியில் எதிர்பாராத விதமாக ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

கடந்த 35 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி வருபவர் ஏழுமலை. இவர் புது வாசர்மேன் பேட் பகுதியை சேர்ந்தவர். இந்த படத்தில் இவரும் ஒரு ஸ்டண்ட் கோரியோகிராபராக பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 49.

இந்நிலையில் சண்டைக்காட்சியின் போது ஏழுமலை திடீரென 20 அடி உயரத்திலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கீழே விழுந்த அவர் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ட்ரம்களில் பலமாக மோதியுள்ளார். மோதிய வேகத்தில் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட ஏழுமலையை ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர். மோதிய வேகத்தில் அவரின் நெஞ்சில் பலத்த காயங்களும், லிவர் பகுதியில் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. இதுதான் இறப்புக்கு காரணம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்

உயிரைப் பறித்த அஜாக்கிரதை

இப்படித்தான் இந்தியன் 2 படத்தில் விபத்து ஏற்பட்டு இரண்டு உயிர்கள் பறிபோனது. இதே போல் கார்த்தி அண்ணன் சூர்யாவின் கங்குவா படத்தின் போதும் கட்டப்பட்ட ரோப் அருந்து சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டது.

எப்பொழுதுமே சூர்யா சண்டைக்காட்சியின் போது மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும் என உத்தரவு போடுவாராம். அது இருந்தால்தான் சண்டைக் காட்சிகளில் நடிப்பாராம். ஆனால் கார்த்தி, அண்ணன் சூர்யா செய்ததை செய்ய தவறியுள்ளார்.

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்