புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிட்டா, ஒரு கோடி தர சொல்லுங்க! சுசித்ராவின் எக்ஸ் கணவர்

Suchithra: உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியாது’ என்று சொல்வார்கள். அப்படி ஒரு கண்டன்ட்டை தான் வெளியில் விட்டிருக்கிறார் பாடகி சுசித்ரா. எட்டு வருஷத்துக்கு முன்னாடி டிவிட்டர் பதிவு மூலம் தமிழ் சினிமாவை புரட்டி போட்ட சுசித்ரா, இப்போ பேட்டிகளின் மூலம் கதற வைத்திருக்கிறார்.

தன்னுடைய முன்னாள் கணவர் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என தொடங்கி கோலிவுட்டின் ஒட்டுமொத்த முக்கிய புள்ளிகளையும் சந்தி சிரிக்க வைத்து விட்டார். சுசித்ரா முதலில் சொல்லிய தன் பாலின இடுப்பாளர் குற்றச்சாட்டுக்கு மட்டும் மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார் கார்த்திக் குமார்.

அதன் பிறகு வெளிவந்த எந்த ஒரு இன்டர்வியூக்கும் அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. மேலும் சுசித்ரா யார் யாரை பற்றி பேட்டியில் சொல்லி இருந்தாரோ அவர்கள் யாருமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதில் பலரது போன்ஸ் சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கிறது என வலைப்பேச்சு யூடியூப் சேனலில் சொல்லப்பட்டது.

suchitra-karthik
suchitra-karthik

இவ்வளவு குற்றச்சாட்டுக்கும் கோலிவுட்டின் முக்கிய புள்ளிகள் அமைதியாக இருக்கிறார்களே என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அவர்கள் கார்த்திக் குமார் மூலம் சத்தமே இல்லாமல் காய் நகர்த்தி இருக்கிறார்கள்.

சுசித்ரா ஒட்டுமொத்த பேட்டியும் கொடுத்து முடித்த பிறகு அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருக்கிறார் கார்த்திக் குமார். தன்னை பற்றி தவறாக பேசியதற்கு ஒரு கோடி வரை இழப்பு தர வேண்டும் என மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

இந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து இருக்கிறது. விசாரணை முடிந்த பிறகு கார்த்திக் குமார் பற்றி இனி பொதுவெளியில் பேச சுசித்ராவுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. இந்த ஒரு கோடி மான நஷ்ட ஈடுக்கு சுசித்ரா தரப்பு இனி தான் பதில் அளிக்க வேண்டும்.

ஒரே வாரத்தில் பழிக்கு பழி தீர்த்த சுசித்ரா

Trending News