ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மோசமான பஞ்சாயத்தை உருவாக்கிய கார்த்திக் நரேன்.. தனுஷை வெளுத்து வாங்க உருவாகும் புதிய படம்

நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை கொண்டு படங்கள் வெளிவருவதும், அதனால் உருவாகும் பஞ்சாயத்துகளும் தமிழ் சினிமாவில் சகஜம். ஆனால் அதுவே சினிமா உலகில் நடக்கும் பிரச்சினைகளை கொண்டு இருந்தால் பார்ப்பவர்களுக்கும் இன்னும் சுவாரசியம் அதிகம். தற்போது அப்படித்தான் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. “துருவங்கள் பதினாறு” படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் கார்த்திக் நரேன்.

முதல் படத்திலேயே விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி கண்டார். இதனால் அவருக்கு அடுத்து அடுத்து வாய்ப்புகள் உருவாகின. அப்படி அவர் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் உருவான “நரகாசுரன்” படம் அவர்களுக்குள் உண்டான கருத்து வேறுபாட்டால் இன்னும் வெளியாகவில்லை. அடுத்து “மாஃபியா” என்னும் படத்தை அருண் விஜய் வைத்து இயக்கி வெளியிட்டார்.

அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இருப்பினும் மணிரத்னம் தயாரிப்பில் நெட்ப்ளிக்ஸ்  வெளியான நவரசாவில் அவர் இயக்கிய பிராஜக்ட் அக்னி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதன் அடிப்படையில் தன்னுடைய அடுத்த படத்தில் தனுஷை இயக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. “மாறன்”என்ற பெயரில் OTT-யில் வெளியான அந்த திரைப்படம் படு மோசமான விமர்சனங்களைப் பெற்றது. படத்தை துவங்கியது முதலே தனுஷ்-கார்த்திக் நரேன் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் சொல்லபட்டது.

அதை உண்மை என கூறுவது போல் படம் வெளியான பிறகு கார்த்திக் நரேன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ரைட் உண்மையை அப்புறம் சொல்கிறேன் என்னும் பதிவு சர்ச்சைகளை கிளப்பியது. படத்தில் தனுஷின் தலையிட்டால் தான் படம் தோல்வி அடைந்தது என கூறப்படுகிறது. மாறன் வெளியீட்டிற்கு முன்பே தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார் கார்த்திக் நரேன்.

“நிறங்கள் மூன்று” என பெயரிடப்பட்டுள்ள அந்த திரைப்படத்தில் அதர்வா, சரத்குமார், ரகுமான் ஆகியோர் நடித்து வருகின்றனர். அந்த படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்த படத்தில் மாறன் திரைப்படத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை சேர்த்து தனுஷை தாக்கும் விதமாக கார்த்திக் நரேன் கதையில் சேர்த்து இயக்கி வருகிறார்.

இதனால் தற்போது தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் இன்டர்நேஷனல் பெரும் சிக்கலில் மாட்டி உள்ளது. பிரச்சினை என்னவோ கார்த்திக் நரேனுக்கும் தனுஷிற்கும் என்றாலும், கார்த்திக் நரேன் இப்படி தங்கள் நிறுவன படத்தில் தனுஷை தாக்கி படம் இயக்கினால் பிரச்சினை தங்களுக்கும் வரும் என்பதால் தற்போது குழப்பத்தில் உள்ளனர்.

Trending News