சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

Suchithra: என் எக்ஸ் புருஷன் கூட அந்த நடிகர் உறவில் இருந்தார்.. மணிரத்னம் பட ஹீரோவை கட்டம் கட்டிய சுசித்ரா

Suchithra: பின்னணிப் பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் பற்றி பேசிய விஷயமே இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதற்குள் மற்றொரு டாப் நடிகரை பற்றி பேசி பகீர் கிளப்பி இருக்கிறார். 14 வருஷத்துக்கு முன்னாடி நடந்த சுச்சி லீக்ஸ் பற்றி தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறார் சுசித்ரா.

அந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை பற்றி மட்டும் தான் பேசுவார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுசித்ரா ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவை சேர்ந்தவர்களையும் இந்த பிரச்சனைக்குள் இழுத்து விட்டு விட்டார்.

தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்ற விஷயத்தை தன்னுடைய முதல் பேட்டியில் இவர் சொல்லி இருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த கார்த்திக் குமார் அப்படி நான் அது போன்று இருந்தால் அதை தைரியமாக வெளியில் சொல்வேன் என்று சொல்லியிருந்தார்.

ஓரினச்சேர்க்கையாளர், தன் பாலின ஈர்ப்பு பற்றி எல்லாம் பேசும் அளவுக்கு நம் சமூகம் இன்னும் பக்குவப்படவில்லை. எனவே அந்த விஷயத்தைப் பற்றி பார்க்காமல், சுசித்ரா குற்றம் சாட்டியிருக்கும் மற்றொரு நடிகரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மணிரத்னம் பட ஹீரோவை கட்டம் கட்டிய சுசித்ரா

தனுஷை தொடர்ந்து சுசித்ரா நடிகர் சித்தார்த் மீது புகார் சொல்லி இருக்கிறார். அதாவது கார்த்திக் குமார் மற்றும் நடிகர் சித்தார்த்த இருவருக்கும் இடையே வாலிப வயதில் நெருக்கமான உறவு இருந்திருக்கிறது. அப்போது இதெல்லாம் ரொம்பவும் மறைக்கப்பட வேண்டிய விஷயமாக இருந்ததால் இதைப்பற்றி வெளியில் யாரும் பேசவில்லை.

இருவரும் நெருக்கமான உறவில் இருந்தது இரண்டு வீட்டாருக்கும் தெரியும் எனவும், கையும் களவுமாக பிடித்து அவர்களை பிரித்து விட்டார்கள் என்றும் சுசித்ரா சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தான் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்று வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக தன்னை திருமணம் செய்து கொண்டார் என்றும் சுசித்ரா சொல்லி இருக்கிறார்.

திருமணமான ஒரு வருஷத்தில் குழந்தை இல்லாததற்கு சிகிச்சை மேற்கொண்டதாகவும், அப்போதுதான் ஒரு பெண் மருத்துவர் கார்த்திக் குமார் பற்றி இப்படி ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சுசித்ராவிடம் சொல்லி இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த விஷயத்தில் இருந்து வெளியில் வருவதற்காக சுசித்ரா, கார்த்திக் குமாரை ஒரு மனநல மருத்துவரிடம் காட்டி இருக்கிறார். முதலில் சிகிச்சைக்கு சென்ற கார்த்திக் குமார் அதன் பின்னர் அந்த விஷயம் பிடிக்காமல் தான் வீட்டை விட்டு கிளம்பி விட்டதாகவும் சுசித்ரா தெளிவாக பேசியிருக்கிறார்.

Trending News