திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

படவாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கிய கார்த்திக்.. ரஜினி படத்தால் யாரும் எதிர்பார்க்காமல் கிடைத்த வாய்ப்பு

வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும் தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் கார்த்திக். அதாவது அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அடி எடுத்த வைத்த கார்த்திக்குக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. மேலும் பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கார்த்திக்கை நாடி வந்தனர்.

ஆனால் அவருடைய கஷ்ட காலம் என்று தான் சொல்ல வேண்டும் சரியான கதையை தேர்ந்தெடுத்து நடிக்க முடியாமல் திணறினார். அவர் நடித்து வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியது. இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதுதான் கார்த்திக்கை ஏவிஎம் நிறுவனம் தொடர்பு கொண்டது.

Also Read : கமலை பார்த்து சுதாரித்துக் கொண்ட ரஜினி.. கெத்தை விடாமல் பிடித்து தொங்கும் சூப்பர் ஸ்டார்

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடிக்குமாறு கார்த்திகை கேட்டுள்ளனர். ஆனால் இதுவரை ஹீரோவாக நடித்துவிட்டு இப்போது போய் வில்லனாக நடிப்பதா என கார்த்திக் அதை மறுத்து விட்டார். ஆனால் அந்தச் சமயத்தில் கார்த்திக்குக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை என்பது தான் உண்மை.

இதனால் ஏவிஎம் நிறுவனம் கார்த்திக்கு ஒரு ஆஃபர் கொடுத்திருந்தது. அதாவது இந்த படத்தில் நடித்தால் உங்களது கேரியர் பழையபடி மாறிவிடும் என்ற வாக்குறுதி கொடுத்ததுடன், நீங்கள் ஹீரோவாக எங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணலாம் என்றும் கூறியுள்ளனர். அதன் பிறகு ரஜினிக்கு வில்லனாக நடிக்க கார்த்திக் சம்மதித்தார்.

Also Read : இந்த வருடம் வைரலான 3 ஹீரோக்களின் போட்டோஸ்.. ரஜினி, அஜித்தை ஓரம் கட்டிய விஜய்

அந்த படம் தான் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளியான நல்லவனுக்கு நல்லவன் படம். ரஜினி, ராதிகா மற்றும் பல பிரபலங்கள் நடித்த இந்த படத்தில் கார்த்திக் வினோத் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டு இருந்தார். ஏவிஎம் சொன்னதுபடியே இந்த படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்திக்கின் சினிமா வாழ்க்கை தொடர ஆரம்பித்தது.

ரஜினி, கமல் போன்று இப்போதும் இவர் ஹீரோவாக இல்லை என்றாலும் கார்த்திக்குக்கான ரசிகர்கள் தற்போதும் இருந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி தனது ஹீரோ அந்தஸ்து முடிந்த பிறகும் இப்போதும் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என கிடைக்கும் இடங்களில் நடித்து மக்களை மகிழ்வித்து வருகிறார்.

Also Read : பாபாவை தொடர்ந்து ரீ ரிலீஸ் ஆகும் ரஜினியின் அடுத்த மாஸ் படம்.. கிளைமாக்ஸில் வரப்போகும் மாற்றம்

Trending News