Suriya: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா வரும் அக்டோபர் 10ஆம் தேதியை குறி வைத்திருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் போட்டிக்கு வந்த நிலையில் இப்படம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என சூர்யா தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த ஏமாற்றத்தை தாங்க முடியாத ரசிகர்கள் அதை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தி வந்தனர். சில ட்ரோல் கூட கிளம்பியது.
இதனால் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் தற்போது சூர்யா 44 பட போஸ்டர் வெளியாகி உள்ளது. இன்றோடு அவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 27 வருடங்கள் ஆகிவிட்டது.
27 வருடங்களை நிறைவு செய்த சூர்யா
நேருக்கு நேர் படத்தில் அறிமுகமான சூர்யா இந்த இடத்தை அடைவதற்கு நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார். ஏகப்பட்ட தோல்விகளை கடந்து தற்போது முன்னணி ஹீரோவாக உருவெடுத்துள்ள இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி சூர்யா 44 போஸ்டரில் அவர் இளமையான லுக்கில் மீசை குறுந்தாடி என அசத்தல் தோற்றத்தில் இருக்கிறார். பைக் ஓட்டுவது போல் இருக்கும் அந்த போஸ்டர் தற்போது ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.
கங்குவா படத்தால் சோர்ந்து போன ரசிகர்கள் இந்த போஸ்டரை பார்த்து ஆறுதல் பட்டு வருகின்றனர். மேலும் இப்படம் சம்பந்தமான வேறு ஏதாவது அப்டேட் கொடுங்கள் என கார்த்திக் சுப்புராஜுக்கு கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
திடுதிப்புன்னு வெளியான சூர்யா 44 போஸ்டர்
- அடுத்தடுத்து 5 இயக்குனரை லாக் பண்ணிய சூப்பர் ஸ்டார்
- வேட்டையனால் அனல் குறைந்த கங்குவா
- கங்குவாவுக்கு முன்பே ரேஸிலிருந்து விலகிய கோட்