புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்கப்பெண்ணில் எல்லை மீறும் கருணாகரன், சோழி உருட்டிய மித்ரா.. நேருக்கு நேர் மோதும் அன்பு, மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் கதாநாயகி ஆனந்திக்கு கெட்ட நேரம் ஆரம்பித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே ஊரில் அவள் குடும்பத்தின் மீது தீராத திருட்டு பழி சுமத்த இருந்தான் சுயம்புலிங்கம்.

மேலும் உயிரே போகும் அளவிற்கு ஆனந்திக்கு சோதனை வந்தது. இதிலிருந்து அவளை காப்பாற்றியது அன்பு மற்றும் மகேஷ் தான். அந்தப் பிரச்சினை முடிந்து சென்னை திரும்பிய ஆனந்திக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் தான்.

அன்புவிடமிருந்து பவரை புடுங்கி விட்டதால் ஆனந்திக்கு ஏற்படும் சிக்கலை அவனால் தகர்க்க முடியவில்லை. மேலும் ஆனந்தி இருக்கும் பக்கமே மகேஷ் போகக் கூடாது என அவனுடைய அப்பா தில்லைநாதன் உத்தரவு போட்டு விட்டார்.

ஆனந்தி மகேஷ் ரூமுக்கு போகாதவாறு கருணாகரன் பார்த்துக் கொள்கிறான். போதாத குறைக்கு ஆனந்தியின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை எழுதி வைக்குமாறு கடன்காரன் சுயம்பு லிங்கத்தின் பேச்சை கேட்டுக் கொண்டு டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறான்.

நேருக்கு நேர் மோதும் அன்பு, மகேஷ்

இந்த விஷயம் ஆனந்திக்கு தெரியவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஆனந்தியின் அம்மா. மற்றொரு பக்கம் அன்பு எனக்கு அழகன் யார் என என்று தெரியும் என சொன்னதிலிருந்து ஆனந்திக்கு அழகனின் ஞாபகம் அதிகமாகிவிட்டது.

என்னதான் மகேஷ் தன்னுடைய காதலுக்கு உதவி கேட்டிருந்தாலும் அழகன் தரப்பிலிருந்து யோசித்து அன்பு ஆனந்தியிடம் தன்னுடைய காதலை சொல்ல நேரம் பார்த்து காத்திருக்கிறான். இனியும் பொறுத்திருந்தால் வேலைக்கு ஆகாது என அன்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கிறான்.

ஒரு பேப்பரில் குடோனுக்கு வரவும் என எழுதி அதை ஆனந்தியிடம் கொடுக்குமாறு சௌந்தர்யாவிடம் சொல்கிறான். சௌந்தர்யாவும் அன்பு கொடுத்த பேப்பரை ஆனந்தியிடம் கொடுத்து விடுகிறாள்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்பு மற்றும் ஆனந்தி குடோனுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போது கருணாகரன் வருவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில் மித்ரா மகேஷின் காதலில் மண்ணை வாரி போடும் அளவுக்கு அவனுடைய அப்பா தில்லை நாதனிடம் இல்லாததும் பொல்லாததுமாக போட்டுக் கொடுக்கிறாள். அம்மாவின் பேச்சை மீறி ஆனந்தியின் அக்கா ஆனந்திக்கு போன் பண்ணி கடன் விஷயத்தைப் பற்றி பேசுகிறார்.

ஆனந்தி போன் பேசிக் கொண்டிருக்கும்போதே கருணாகரன் அவள் கையில் இருந்து போனை பிடுங்கி தூக்கி வீசி அடிக்கிறான். இதை பார்த்த அன்பு மற்றும் மகேஷ் இருவருமே ஒரே நேரத்தில் அந்த இடத்திற்கு வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் நேருக்கு நேர் கருணாகரனுடன் மோதுவது போல் இன்றைய ப்ரோமோ காட்டப்பட்டிருக்கிறது. இது சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News