ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

செம குண்டாக இருந்த கருணாஸ் மகளா இது? என்ன திடீர்னு ஒல்லி ஆகிட்டாங்க

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து கதையின் நாயகனாக பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் கருணாஸ். கலருக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்தவர்களின் பட்டியலில் இவருக்கு மிக முக்கியமான இடம் உண்டு. இயக்குனர் பாலாவின் பட்டறையில் இருந்து வந்த நடிகர்களில் இவரும் ஒருவர்.

ஆரம்பத்தில் காமெடி நாயகனாக கலக்கிய தனக்கென ஒரு தனி இடம் பிடித்த கருணாஸ் அதன்பிறகு ஹீரோவாகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் குணச்சித்திர வேடமாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அப்படியே ஏற்று நடிக்க கூடிய நடிகர்களில் இவர் முக்கியமானவர்.

தற்போது சினிமா அரசியல் என இரண்டையும் ஒரே நேரத்தில் பார்த்துவரும் கருணாசுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். மகன் கென் கருணாஸ் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு அவரது ரேஞ்சே வேறு ஆகிவிட்டது என்று சொல்லலாம்.

ஆனால் கருணாஸ் தன்னுடைய மகளை பெரும்பாலும் வெளியில் காட்டியதில்லை. அவர்கள் குடும்பமாக இன்டர்வியூ கொடுக்கும் போது மட்டுமே அவரது மகளை பார்க்க முடியும். கருணாஸ் மனைவி கிரேஸ் எப்போதுமே தனக்கு உடல் பெரியதாக இருக்கிறது என்பதை பற்றி கவலைப்பட்டதே கிடையாது. எப்போதுமே இயல்பாக இருப்பவர். அவருடைய மகளும் கொஞ்சம் குண்டாக இருந்தார்.

karunas family
karunas family

ஆனால் இப்போது பார்ப்பவர்கள் வியக்கும் அளவுக்கு தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார். இது பலருக்கும் அதிர்ச்சிதான். இது எப்படி சாத்தியம் என்பதை போல ஆச்சரியமாக பார்க்கின்றனர். சினிமா பிரபலங்களின் மகள்கள் ஆரம்பத்தில் குண்டாக இருப்பதும் பிறகு உடல் எடையை குறைப்பது சகஜம்தானே.

ஏன் சமீபத்தில் கூட சுந்தர் சி மற்றும் குஷ்பு ஆகியோரின் மகள் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Trending News