புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

காதர் பாட்சாவை பின்னுக்கு தள்ளிய வீரன்.. 3வது நாள் வசூல் விவரம்

கடந்த வெள்ளிக்கிழமை ஹிப்ஹாப் ஆதியின் வீரன் மற்றும் ஆர்யாவின் காதர் பாட்சா படங்கள் வெளியாகி இருந்தது. இசையமைப்பாளராக தமிழ் சினிமா அடி எடுத்து வைத்த ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக சில படங்களில் வெற்றி கொடுத்தாலும் சமீபகாலமாக தொடர் தோல்வியை கொடுத்து வருகிறார்.

வீரன் படம் அவரது சினிமா கேரியரில் சற்று தூக்கி விட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏ ஆர் கே சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள வீரன் படத்தில் ஆதிரா, முனீஸ்காந்த், வினய் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். படம் ஆக்சன், காமெடி என ஒரு கமர்சியல் படமாக வெளியாகி இருந்தது.

Also Read : Veeran Movie Review- விசேஷ சக்தியால் சூப்பர் ஹீரோவாக மாறும் ஆதி.. வீரன் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

மேலும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு வரவேற்பு நன்றாக கிடைத்து வருகிறது. அதன்படி இந்தியாவைப் பொறுத்தவரையில் முதல் நாளில் 1.30 கோடி வசூல் செய்திருந்தது. இரண்டாவது நாளில் 1.65 கோடி வசூலை வீரன் படம் ஈட்டியது. மேலும் படத்திற்கு கிடைத்த பாசிடிவ் விமர்சனம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மட்டும் 2 கோடி வசூல் செய்துள்ளது.

அந்த வகையில் மூன்று நாட்கள் முடிவில் கிட்டத்தட்ட 4. 95 கோடி இந்தியாவில் வீரன் படம் கலெக்ஷன் செய்துள்ளது. மேலும் இதே நாளில் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் வெளியாகி இருந்தது. எப்போதும் போல கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக முத்தையா இந்த படத்தை எடுத்திருந்தார்.

Also Read : ஆர்யா நடித்த முதல் படத்திலிருந்து சொக்கி போன இளசுகள்.. ஒரே படத்தால் வளர்ந்த 4 நட்சத்திரங்கள்

மேலும் இந்த படத்தைப் பார்க்கும்போது சீரியல் பார்ப்பது போல இருப்பதாக சிலர் விமர்சனம் செய்திருந்தனர். இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனம் தான் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. ஆகையால் படத்தின் வசூலும் சற்று குறைந்துள்ளது. முதல் நாளில் காதர் பாட்சா படம் 1.1 கோடி வசூல் செய்தது.

மேலும் இரண்டாவது நாள் முடிவில் 1.22 கோடி வசூல் செய்திருந்தது. மூன்றாவது நாள் முடிவில் 1.8 கோடி மட்டுமே வசூல் பெற்றதால் மொத்தமாக இதுவரை 4.12 கோடி மட்டுமே வசூல் செய்து இருக்கிறது. சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் ஆர்யா இருந்தும் அவரைப் பின்னுக்கு தள்ளி ஹிப்ஹாப் ஆதி வீரன் படம் மூலம் வசூல் வேட்டையாடி வருகிறார்.

Also Read : Kathar Basha Endra Muthuramalingam Review- அல்லாவும் அய்யனாரும் ஒன்னுதான்.. காதர் பாட்ஷா தேறுமா படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

Trending News