வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தரமான படங்கள் 5 கொடுத்தாலும் ஜெயிக்க முடியாத கதிர்.. லோகேஷை மலை போல நம்பி இருக்கும் பிகில் கோச்

Actor Kathir: சினிமாவில் அழகும் திறமையும் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு லக்கும் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். அப்படித்தான் திறமையான தரமான 5 படங்களை கொடுத்தும் அவரால் முன்னணி நடிகராக மாற முடியவில்லை. இப்போது அவர், இளம் இயக்குனராக ஒருபுறம் ரஜினி ஒரு புறம் விஜய் என டாப் நடிகர்களின் படங்களை இயக்கி ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் லோகேஷை தான் மலை போல் நம்பி இருக்கிறார்.

மதயானை கூட்டம்: விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் கதிர் ஹீரோவாக பார்த்திபன் கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி நடித்த படம் தான் மதயானை கூட்டம். இந்தப் படத்தில் கதிரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மிக இயல்பாக நடிக்க கூடிய நடிகர்களுள் ஒருவர்தான் கதிர், அந்த வகையில் இந்த படத்தில் பார்த்திபனாக தன்னுடைய திறமையான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை வெகு சீக்கிரமே கவர்ந்து விட்டார். தரமான கதைக்களத்தை கொண்ட இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து, பாசிட்டிவ்வான விமர்சனத்தை பெற்றது. 

பரியேறும் பெருமாள்: மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமான பரியேறும் பெருமாள் படத்தில் கதிர், ஆனந்தி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். சமூகத்தில் நிலவும் சாதி ஏற்றத்தாழ்வை இந்த படத்தில் வலுவாக பேசினர். இந்தப் படமும் கதிர் நடிப்பில் வெளியான தரமான படங்களில் ஒன்று.

Also Read: லிப்லாக், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டும் பிக் பாஸ் ஜோடி.. எல்லாமே விஜய் அப்பா SAC போட்ட விதை

கிருமி: கதிர் முதன் முதலாக  திரில்லர் ஜானரில்  நடித்த படம் தான் கிருமி. இந்த படத்தில் கதிரின் ஆக்ரோஷமான நடிப்பை பார்க்க முடிந்தது. தன்னை ஒரு  உண்மையான நடிகர் என்பதை கதிர் இந்த படத்தின் மூலம் நிரூபித்து காட்டினார். இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்காவிட்டாலும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றது.

அக்கா குருவி: தமிழில் சர்ச்சைக்குரிய படங்களான உயிர், சிந்து சமவெளி போன்ற படங்களை இயக்கிய சாமி இயக்கத்தில்வெளிவந்த படம் தான் அக்கா குருவி. இந்த படம் ஒரு ஈரானிய திரைப்படத்தின் ரீமேக். இருப்பினும் ஒரு ஈரானிய திரைப்படத்தை முடிந்த அளவிற்கு நம்  மண்வாசனையுடன் கொடுக்க முயற்சித்தனர். இந்தப் படத்தில் ஒரு சிறுவர், சிறுமியை முதன்மை கதாபாத்திரமாக நடிக்க வைத்து உணர்வு பூர்வமான படைப்பை கொடுத்தனர். இதில் தேவா கேரக்டரில் கதிர் தனது எதார்த்தமான நடிப்பை வெளிகாட்டி படத்திற்கு வலு சேர்த்தார்.

Also Read: ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்குதோ இல்லையோ, தளபதி 68 உறுதி.. 2 பெரிய கையை வளைத்து போட்ட வெங்கட் பிரபு

தலைக்கூந்தல்: தந்தை, மகனுக்கு இடையேயான பிணைப்பை அழகாக வெளிப்படுத்திய தலைக்கூந்தல் இந்த வருட தொடக்கத்தில் வெளியானது. கலைச்செல்வன், சமுத்திரக்கனி உள்ளிட்டோருடன் கதிர் கிராமத்து கெட்டப்பில் இந்த படத்தில் நடித்தார். ஒரு கிராமத்து இளைஞன்  எந்த அளவுக்கு வெள்ளந்தியாக இருப்பார் என்பதை, கலைச்செல்வன் நடித்த முத்து கதாபாத்திரத்தின் இளம் வயது முத்தாக நடித்தார். இந்த படம் வெளியான போது கதிரின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

இவ்வாறு 5 தரமானபடங்களில் கதிர் நடித்திருந்தாலும் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம்  இன்னமும் கிடைக்கவில்லை. இவர் விஜய் நடித்த பிகில் படத்தில் கோச்சாக தளபதியுடன் இணைந்து நடித்து பெயர் எடுத்தார். அதன் பின் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் கதிர் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து டாப் இயக்குனர்களின் படங்களில் ஹீரோ வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: கழுதை கெட்டா குட்டி சுவரு.. முடிவான லியோ ஆடியோ லான்ச், எங்க நடக்குது தெரியுமா?

Trending News