புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கதிருக்காக கெஞ்சும் அண்ணி.. மீனாவின் மூக்கை உடைத்த ஐஸ்வர்யா

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக ஹோட்டல் தொழிலை துவங்கியிருக்கும் கதிரின் கடையில் இன்று டிபன் முழுவதும் காலியானதால், 20 பேருக்கு சமைக்க இருக்கும் மதிய உணவும் தீர்ந்துவிடும் என முல்லை, மல்லியிடம் சவால் விடுகிறார்.

ஆனால் மாலை 4 மணி ஆனாலும் வெறும் ஐந்து பேர் மட்டுமே ஹோட்டலுக்கு வந்த சாப்பிட்டதால் அதை வைத்து மல்லி, கதிர்-முல்லை இருவரையும் கேலி கிண்டல் செய்கிறார். இதனால் வெறுப்பான கதிர்-முல்லை இருவரும் வாடிக்கையாளர்கள் யாராவது வருவார்களா என வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

Also Read: மேக்கப்புக்கு கூட காசு இல்லாமல் திரியும் முல்லை,கதிர்

மறுபுறம் தனம் பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு வரும் பழக்கமான ஒருவரிடம் கதிரின் ஹோட்டல் தொழிலைக் குறித்து விளக்கம் அளித்து ஏதாவது ஆர்டர் இருந்தால் கொடுங்கள் என்று சிபாரிசு செய்கிறார்.

உடனே அவரும் அடுத்து வீட்டில் நிகழும் விசேஷத்திற்கு நிச்சயம் கதிர் ஹோட்டலில் ஆர்டர் கொடுக்கிறேன் என வாக்குறுதி அளிக்கிறார். இந்த ஆர்டர் மட்டும் கிடைத்தால் அது நிச்சயம், கதிர் ஹோட்டல் தொழில் மூலம் சீக்கிரம் வளர வைக்கும்.

Also Read: வீட்டையே பார்லர் ஆக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ்

மேலும் ஐஸ்வர்யா வீட்டிலேயே பார்லர் ஆரம்பித்து இருப்பதால் அங்கு வரும் ஈஸ்வரியை வைத்துதான் கற்றுக்கொண்ட வித்தைகளை எல்லாம் அவர் முகத்தை அலங்கரித்து மீனாவின் மூக்கை உடைக்கிறார். மீனாவும் ஐஸ்வர்யாவிற்கு ஏதோ ஒன்று தெரிகிறது என்று ஒத்துக் கொள்கிறார்.

இதன் பிறகு நாளை முதல் ஐஸ்வர்யா துவங்க இருக்கும் பியூட்டி பார்லர் ஓஹோன்னு ஓடப்போகிறது. அதன் பிறகு வீட்டிலேயே பார்லர் வைத்திருக்கும் ஐஸ்வர்யா. ஒரு கடையை வாடகைக்கு எடுத்து குன்னக்குடியை கலக்கப் போகிறார்.

Also Read: வீட்டையே பார்லர் ஆக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ்

Trending News