புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஐஸ்வர்யாவின் ஆடம்பரத்தால் நெற்கதியாக நிற்கும் கண்ணன்.. பகடைக்கையாக மாட்டிக்கொண்ட கதிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இன்றைய எபிசோடு பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம். அதாவது ஐஸ்வர்யா பேச்சைக் கேட்டு கண்ணன் செய்யும் ஒவ்வொரு வேலையும் அவமானப்பட்டு இருக்கிறான். வீடியோ சேனலை எடுக்க வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து அதையே செய்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவை பார்த்தால் ரொம்பவே எரிச்சலாக தான் இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் இதை இன்னும் பெரிய அளவில் எடுக்க வேண்டும் என்பதற்காக அதற்கான பொருட்களை வாங்க வேண்டும் என்று கண்ணனிடம் சொல்கிறாள். அதற்காக பணம் தேவை நீ போய் கதிர் மாமாவிடம் கேட்டு வாங்கிட்டு வா என்று அவனை டார்ச்சர் பண்ணுகிறாள். அவனும் வேறு வழி இல்லாமல் ஐஸ்வர்யா பேச்சைக் கேட்டு கதிரிடம் பணத்தை வாங்கி கொடுக்கிறான்.

Also read: குணசேகரன் வாங்கும் மரண அடி.. ஒட்டு மொத்த குடும்பமும் வைக்கும் ஆப்பு

இவன் மட்டும் கெட்டது காணாம கதிரையும் சேர்த்து இவங்க பண்ற தப்புக்கு துணை போக வைக்கிறான். அவரும் எந்தவித கேள்வியும் கேட்காமல் இவன் கேட்கிற பணத்தை எல்லாம் கொடுக்கிறார். அதற்காக மூர்த்தியிடம் எதுவுமே சொல்லாமல் மறைத்து வருகிறார். இது மூர்த்திக்கு தெரிந்தால் இந்த விஷயம் எங்க போய் முடியுமோ. ஏற்கனவே குடும்பம் சின்னா பின்னமாக பிரிந்து இருக்கிறது.

இதுல கதிர் வேற இப்படி தெரியாம ஒரு வேலையை பார்க்கிறான் என்று தெரிஞ்சா மூர்த்தி ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. இதோட ஐஸ்வர்யா விடாமல் அவளுடைய நிச்சயதார்த்தத்தை பெரிய அளவில் நடத்த வேண்டும் என்று கண்ணனிடம் சொல்கிறாள். அவனும் என்னிடம் இப்ப அந்த அளவுக்கு பணம் இல்லை என்ன பண்ண என்று கேட்கிறார். உடனே ஐஸ்வர்யா பேங்க் லோன் கேட்போமா என்று வாய் கூசாமல் கேட்கிறாள்.

Also read: கோபிக்கு இந்த அவமானம் தேவையா?. பாக்யாவிற்காக மகன்கள் கொடுத்த அடி

கண்ணன் அதெல்லாம் முடியாது ஏற்கனவே கடன் இருக்கு. அதனால நமக்கு லோன் கிடைக்காது என்று சொல்கிறான். உடனே ஐஸ்வர்யா வேற ஏதாவது யோசிச்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ணி என்னுடன் நிச்சயதார்த்தத்தை பெரிய அளவில் கிராண்டாக பண்ண வேண்டும் என்று கூறி அதையும் நம்மளுடைய வீடியோ சேனலில் போட்டு பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்கிறாள்.

கடைசியில் ஐஸ்வர்யாவின் பேராசையால் கண்ணன் கடங்காரனாக ஆகி நெற்கதியாக நிற்கப் போகிறான். மேலும் ஜீவா, மீனாவின் அப்பா வீட்டில் இருந்து கடை விஷயங்களை பற்றி நல்ல ஐடியா கொடுக்கிறார். ஆனால் இது சரிப்பட்டு வராது என்று அவர் எடுக்கும் முடிவு தான் சரி என்கிற மாதிரி பேசுகிறார். இது ஜீவாக்கு மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. இதை பார்த்த மீனா அவர் அப்பாவிடம் நீங்கள் இப்படியே பண்ணிக்கிட்டு இருங்க நாங்க சீக்கிரமா மூர்த்தி மாமா வீட்டுக்கு போயிடுவோம் என்று பிளாக்மெயில் பண்ணி வருகிறார்.

Also read: இனியாவை பொக்கிஷமாக பாதுகாக்கும் விக்ரம்.. இங்கிதம் தெரியாமல் அசிங்கப்பட்ட நல்லசிவம்

Trending News