புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பாண்டியனிடம் அசிங்கப்பட்ட ராஜி.. மனைவியின் கௌரவத்தை காப்பாற்ற கதிர் எடுக்கப் போகும் முடிவு

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், ராஜி காலேஜுக்கு போவதற்கு தயாராகிய நிலையில் பஸ்ஸில் போவதற்கு காசு இல்லாமல் மீனாவிடம் கேட்பதற்கு போகிறார். ஆனால் மீனா அவருடைய அறையில் இல்லாததால் கோமதியிடம் மீனா எங்கே போயிருக்கிறார் என்று ராஜி கேட்கிறார்.

அதற்கு கோமதி, மீனா காலையிலேயே ஆபீஸ்க்கு கிளம்பி போயிட்டா என்று சொல்லி சாப்பாடு பண்ணி டிபன் பாக்ஸில் வைத்துக் கொடுக்கிறார். வாங்கிட்டு போன ராஜி மறுபடியும், கோமிதியிடம் தயக்கத்துடனே வந்து நிற்கிறார். உடனே கோமதி என்னம்மா பணம் ஏதாவது தேவைப்படுதா என்று கேட்கிறார்.

ஆமாம் அத்தை பஸ்ஸுக்கு போவதற்கு காசு வேண்டும் என்று சொன்னதும் அடுப்பாங்கரையில் வைத்திருந்த டப்பாக்கள் அனைத்திலும் காசு இருக்கா என்று கோமதி உருட்டுகிறார். அதில் எதுவும் இல்லாததால் கொஞ்ச நேரம் இரு நான் மாமாவிடம் போய் பணத்தை வாங்கிட்டு வரேன் என்று சொல்லி பாண்டியனிடம் கேட்கப் போகிறார்.

உடனே பாண்டியன், கதிர் இருக்கதே தெண்ட செலவு, இதுல வேற ராஜிக்கும் செலவு செய்யணுமா என்று திட்டிக்கொண்டே பணத்தை கொடுக்கிறார். இதை வெளியிலிருந்து கேட்ட ராஜி அவமானத்தில் அழத் தொடங்கி விடுகிறார். இதை அனைத்தையும் கதிர் பின்னாடி இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு ராஜி எதுவுமே தெரியாதபோல் அடுப்பாங்கரையில் இருக்கிறார். அந்த நேரத்தில் கோமதி பணத்தை வந்து கொடுக்கிறார். அதற்கு ராஜி வேண்டாம் அத்தை என்னிடம் பணம் இருக்கிறது. நான் சரியாக பார்க்காமல் உங்களிடம் கேட்டுட்டேன் என்று சமாளித்து பணத்தை வாங்காமல் காலேஜுக்கு கிளம்பி விடுகிறார்.

மனைவிக்காக கதிர் எடுத்த முடிவு

பிறகு கையில் பணம் இல்லாததால் தோழிகளிடம் நீங்கள் அனைவரும் போங்க. நான் அப்புறமா வருகிறேன் என்று சொல்லி நடந்து கொண்டே காலேஜுக்கு போகிறார். பின்னாடியே கதிரும் எதுவும் சொல்லாமல் கவலையுடன் போய்க் கொண்டிருக்கிறார். அப்பொழுது கதிர் அவருடைய நண்பர்களிடம் எனக்கு ஒரு பார்ட் டைம் ஜாப் வேண்டும் ஏதாவது இருந்தால் சொல்லுங்க என்று சொல்கிறார்.

உடனே அங்கிருந்த நண்பர் ஃபுட் டெலிவரி வேலை ஒன்று இருக்கிறது நாளைக்கு போய் பேசி உனக்கு அந்த வேலையை வாங்கி தரேன் என்று சொன்னதும் கதிருக்கு அப்பதான் முகத்தில் ஒரு சந்தோஷமே வந்தது. அதாவது இதுவரை நான் காலேஜுக்கு போகும்போது எத்தனையோ முறை என்னுடைய அப்பா என்னை திட்டிட்டு பணம் கொடுத்து இருக்கிறார்.

அப்பொழுதெல்லாம் எனக்கு ஒன்றும் தோணவில்லை. ஆனால் இப்பொழுது எனக்கு கல்யாணம் ஆகி என்னை நம்பி ஒருத்தி இருக்கும் பொழுது நான் சம்பாதித்துக் கொடுத்ததால் தான் அது கௌரவமாக இருக்கும் என்று முடிவு பண்ணி மனைவியின் கௌரவத்தை காப்பாற்ற கதிர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

Trending News