விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக வந்த உறவினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கதிர் முல்லையை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டே வெளியேறி விட்டான். ஏனென்றால் முல்லையின் மருத்துவ செலவிற்காக வெளியில் கடன் வாங்கியதால், இந்த பிரச்சினை ஏற்பட்டதால் அவர்கள் தங்களால் குடும்பத்தில் சண்டை வேண்டாம் என கிளம்பிவிட்டனர்.
மூர்த்தி, தனம் உள்ளிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே கதிர்-முல்லை இருவரையும் தடுத்து நிறுத்தினாலும், அவர்கள் இவர்களது பேச்சை கேட்கவில்லை. ‘வீட்டை விட்டு வெளியேறினால் மறுபடியும் இந்த வீட்டிற்குள்ளே வரக்கூடாது’ என மூர்த்தி விரட்டினாலும் கதிர் அதைக் கேட்காமல் முல்லையை அழைத்துக் கொண்டு கிளம்புகிறான்.
பிறகு வீட்டில் இருக்கும் தனம் உள்ளிட்ட அனைவரும் கதிர்-முல்லை வீட்டை விட்டு வெளியேறியதால் சோகத்தில் அழுது கொண்டிருப்பதால், மூர்த்தி அவர்களைப் பார்த்து, ‘நம்மளை பற்றி கவலைப்படாமல் சென்றவர்களை நினைத்து ஏன் அழுகிறீர்கள்’ என திட்டுகிறான்.
பிறகு அவனும் படுத்துக்கொண்டே அழுகும் போது, திடீரென்று அவனுக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. இதன் பிறகு மூர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ளும்போது மறுபடியும் மூர்த்தியை பார்க்க கதிர் வருவான். இருப்பினும் கண்ணன் இது போலே காதல் திருமணம் செய்து கொண்டு வெளியேறியதும் லஷ்மி அம்மாவிற்கு உடல்நிலை மோசமாகி அதன்பின் அவர் இறந்துவிட்டார்.
தற்போது கதிர் செய்த காரியத்தால் மூர்த்தி உடல் நிலை குறைவு ஏற்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு மற்றொரு சோகம் ஏற்பட்டிருக்கிறது. இதை புரிந்து கொண்டு கதிர் அண்ணனின் மனம் பாதிக்கப்பட்டு உடல் நிலை குறைவு ஏற்படும் அளவுக்கு வந்ததால் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு வீட்டிற்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
இருப்பினும் குடும்பத்தினரிடம் இட்ட சவாலை நிறைவேற்றுவதற்காக்கவும், மனைவி முல்லையின் மருத்துவ செலவிற்காக வாங்கிய கடன் தொகையை அடைக்க வெளியூருக்கு வேலைக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது. தற்போது வீட்டை விட்டு வெளியேற கதிர் எடுத்திருக்கும் முடிவு பாண்டியன் ஸ்டோர்ஸ் மட்டுமல்லாமல் சீரியல் ரசிகர்களையும் கலங்க வைத்திருக்கிறது.