செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

எதிர்நீச்சல் 2வில் ஒரே கல்லில் 3 மாங்காவுக்கு குறி வைத்த கதிர்.. தர்ஷனிடம் இருந்து தப்பிக்க போகும் அன்புக்கரசி

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், தர்ஷன் கல்யாணத்தை வைத்து ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்று குணசேகரன் முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் தர்ஷனுக்கு கல்யாணம் ஏற்பாடுகள் அனைத்தையும் நடத்துவதற்கு போஸ்டர் பெரியசாமியின் மகள் அறிவுக்கரசி மும்மரமாக வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார். ஆனால் இந்த கல்யாணத்தை நிறுத்தி ஆக வேண்டும் என்று நான்கு மருமகளும் முடிவு பண்ணி விட்டார்கள்.

அந்த வகையில் ஈஸ்வரி மற்றும் நந்தினி இருவரும் சேர்ந்து போஸ்டர் பெரியசாமி வீட்டிற்கு போகிறார்கள். போனதும் அன்புக்கரசியை பார்த்து பேசுகிறார்கள். அன்புக்கரசி ரொம்ப சின்ன பெண்ணாகவும் விவரமே தெரியாத பச்சைக் குழந்தை போல தான் இருக்கிறார். ஆனாலும் வீட்டில் என்ன சொன்னாலும் தலையாட்டும் பொம்மையாக இருப்பதால் கல்யாணம் என்று என்னன்னு கூட தெரியாமல் ஓகே சொல்லிவிட்டார்.

இதனால் அன்புக்கரசியை பார்த்ததும் நந்தினி மற்றும் ஈஸ்வரி கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லு என அட்வைஸ் பண்ணுகிறார்கள். இதை கேட்டதும் அறிவுக்கரசி பொங்க ஆரம்பித்துவிட்டார். இருந்தாலும் இதற்குப் பிறகு இவர்களிடம் நேரடியாக பேசினால் வேலைக்காகாது என்று முடிவு பண்ணிய ஈஸ்வரி நீங்க என்னதான் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினாலும் நாங்கள் அதை தடுத்து விடுவோம்.

எப்படி என் பொண்ணு தர்ஷினி கல்யாணத்தை தடுத்து அவரை ஜெயிலுக்கு அனுப்பனுமோ அதே மாதிரி இந்த கல்யாணத்தையும் தடுத்து நிறுத்திக் காட்டுவோம் என்று சவால் விட்டுவிட்டார். அடுத்ததாக இவர்களை மடக்க வேண்டும் என்றால் வேறு வழியில் தான் நாம் இறங்க வேண்டும் என்று நான்கு மருமகளும் முடிவு பண்ணி விட்டார்கள்.

இன்னொரு பக்கம் சக்தி, தர்ஷனை கூட்டிட்டு போய் ஜெயிலில் இருக்கும் குணசேகரன் இடம் நியாயம் கேட்கலாம் என்று கதிரை பார்த்து பேசுகிறார். ஆனால் கதிர் எதற்கும் அடங்காமல் இருப்பதால் சக்தி என்னஆனாலும் பரவாயில்லை இன்று நான் தர்ஷனை கூட்டிட்டு குணசேகரனை சந்திக்காமல் விட மாட்டேன் என்று பிடிவாதத்துடன் அங்கே இருக்கிறார்.

அதே நேரத்தில் கதிர் கிரிமினலா யோசிக்கும் விஷயத்தையும் சக்தி புரிந்து கொண்டார். அதாவது ஒரே கல்லில் மூன்று மாங்காக்கு குறி வைக்கும் அளவிற்கு தர்ஷன் கல்யாணம் பண்ணியாச்சு என்றால் இந்த சொத்துக்கு அவன் இடைஞ்சலாக இருக்க மாட்டான். அதே நேரத்தில் ஞானத்திற்கு 27 லட்ச ரூபாய் பணம் கொடுத்து அவனுடைய வாயை அடைத்து விட்டாச்சு.

ஆதிரைக்கு அம்மாவின் நகையே வாங்கி கொடுத்து ஆதிரையின் பங்கையும் கொடுத்து சமரசம் செய்துவிட்டாய். அத்துடன் குணசேகரன் எப்படியும் வெளியே வராதபடி நான்கு மருமகளும் கேசில் உறுதியாக இருப்பதால் அவரும் சொத்துக்கு பிரச்சனை பண்ண முடியாது என்பதால் நீ பக்கவாக காய் நகர்த்தி எல்லா சொத்துக்களையும் ஆட்டை போடுவதில் மும்மரமாக இருக்கிறாய் என்று சக்தி, கதிரின் கிரிமினல் புத்தியை புரிந்து கொண்டார்.

இது எதுவும் தெரியாத குணசேகரன் ஆதிரை மற்றும் தர்ஷன், கதிர் சொல்வதைக் கேட்டு ஆடுகிறார்கள். ஆனால் மொத்தமாக ஆப்பு வைக்கும் போது தான் தெரியும் கதிர் எந்த அளவுக்கு தில்லாலங்கடி வேலை பார்த்து வைத்திருக்கிறார் என்று. இதனை அடுத்து தர்ஷனுக்கு கல்யாணம் நடக்கும் ஆனால் பொண்ணு அன்புக்கரசியாக இருக்காது.

ஏனென்றால் தர்ஷன் காதலித்த விஷயம் நான்கு மருமகள்களுக்கும் தெரிய வரப்போகிறது. அதனால் தர்ஷனை நம்பி ஏமாந்து போய் நிற்கும் அந்தப் பெண்ணையே தர்ஷனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார்கள். எது எப்படியோ தர்ஷனிடமிருந்து அன்புக்கரசி எஸ்கேப் ஆகிவிடுவார்.

ஆனால் இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கும் தர்ஷன் காதலித்த பெண்ணை சேர்த்து வைப்பதற்கும் மறுபடியும் இந்த மருமகள்கள் போராட போகிறார்கள். இதில் எங்கிருந்து அவங்க சொந்த காலில் நின்னு முன்னேற போறாங்க. வீட்டில் நடக்க பிரச்சனையும் அவர்களுக்கு வரும் சிக்கல்களையும் சமாளிப்பது இவர்களுக்கு மிகப்பெரிய டாஸ்க் ஆக இருக்கிறது.

Trending News