புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

நாமளே ஆக்கினத நாமளே சாப்பிட்டா கடை விளங்கிடும்.. ஹோட்டலால் அசிங்கப்படும் கதிர்-முல்லை

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 5 லட்சம் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வீட்டை விட்டு வெளியேறிய முல்லை-கதிர் இருவரும் புதிதாக ஹோட்டல் ஒன்றை துவங்கி உள்ளனர்.

என்னதான் ஹோட்டலில் சுவையான, விலை குறைந்த உணவை கொடுத்தாலும் பழக்கம் இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஆகையால் புதிதாக துவங்கியிருக்கும் பாண்டியன் ஹோட்டலில் வாடிக்கையாளர்களின் வரத்து குறைவாக இருப்பதால் சரிவர கடை ஓடவில்லை.

Also Read: இறந்த பின் கைவிடப்பட்ட விஜய்டிவி பிரபலத்தின் குடும்பம்

இதனால் சமைத்த உணவை வீணாக்கக் கூடாது என்பதற்காக மிஞ்சிய உணவுகளை முதியோருக்கு விடுதிக்கு கொடுக்கின்றனர். அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் வருவார்கள் என பார்த்து பார்த்து கண்கள் பூத்து போன கதிர், ஒருகட்டத்தில் இலையைப் போட்டு வீட்டில் இருப்பவர்களை அமர வைத்து சாப்பிட வைக்கிறார்.

இதைப் பார்த்த சீரியல் ரசிகர்கள் ‘நம்மளே ஆக்கி நம்மளை சாப்பிட்டா, கடை எப்படி விளங்கும் கதிர்!’ என்று கிண்டல் அடிக்கின்றனர். ஆனால் மனம் தளராத கதிர் புதிதாக வரும் வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் தன்னுடைய கடைக்கு வரும் வைக்கப் போகிறார்.

Also Read: வாய்ப்புக் கொடுத்து வம்பு இழுக்கும் விஜய் டிவி

இதனால் இனிவரும் நாட்களில் பாண்டியன் ஹோட்டலில் தாறுமாறாக வாடிக்கையாளர்கள் குவிய போகின்றனர். ஏற்கனவே கதிர் முல்லையின் அக்காவிடம் ‘ஒரு மாதத்தில் பாண்டியன் ஹோட்டலில் லாபம் வருவதை காட்டுகிறேன்’ என போட்ட சபதத்தையும் நிறைவேற்றப் போகிறார்.

ஒருபுறம் பாண்டியன் ஸ்டோர்ஸ் மறுபுறம் பாண்டியன் ஹோட்டல் இதை தொடர்ந்து ஐஸ்வர்யா வீட்டிலேயே பாண்டியன் பியூட்டி பார்லர் ஒன்றையும் துவங்கியுள்ளார். ‘எல்லாக் கடையும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தான் இருக்கிறது’ என நெட்டிசன்கள் பங்கம் செய்கின்றனர்.

Also Read: பாண்டியன் ஹோட்டலுக்கு இப்படி எல்லாமா ஆப்பு வரும்

Trending News