வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஓவர் நைட்டில் ஒபாமா ரேஞ்சுக்கு பில்டப் செய்யும் கதிர்.. குரளி வித்தை பிரமாதம் முல்லை

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது இத்தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப வீட்டை விற்று புதிய வீடு கட்ட முயற்சி செய்து வருகிறார்கள். ஜனநாதன் மொத்த பணத்தையும் கொடுத்த வீட்டை வாங்க முற்பட்டாலும் மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அவருக்கு வீட்டை கொடுக்க விருப்பமில்லாமல் உள்ளனர்.

இதனால் மீனா தனது அப்பாவுக்காக மூர்த்தியிடம் பேசி வருகிறார். மறுபுறம் கதிர் கடையை திறந்து 15 நாட்கள் ஆன நிலையில் இன்னும் ஒரு ரூபாய் கூட லாபம் எடுக்காமல் தொடர்ந்து நஷ்டத்தில் கடையை ஒட்டி வருகிறார். தினமும் புது புது முயற்சி செய்து எப்படியாவது கடையை லாபத்தில் ஓட்ட வைக்கலாம் என்ற எடுக்கும் எல்லாம் முயற்சியும் தோல்வியில்தான் முடிகிறது.

Also Read : அப்பனைப் போல பிள்ளைக்கும் ரெண்டு தாரம் போல.. சீரியலில் என்ட்ரி கொடுத்த சக்காளத்தி

இந்நிலையில் கதிர் ஒரு நாள் புரோட்டா போடும்போது அந்த ஸ்டைலை பார்த்து ஒருவர் வீடியோ எடுத்திருந்தார். அது இணையத்தில் வெளியான பிறகு இரண்டு நபர்கள் கதிரின் பாண்டியன் மெஸ் ஹோட்டலுக்கு சாப்பிட வருகின்றனர். அப்போது அவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்கும் போது இந்த வீடியோவை காட்டுகிறார்கள்.

அந்த சமயத்தில் தான் தெரிகிறது இரண்டு நாளாக கதிர் புரோட்டா போட்ட வீடியோ தான் வைரலாக உள்ளது என்பது. அதுமட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கண்ணன், மூர்த்தி அனைவரும் இந்த வீடியோவை பார்த்து பெருமை கொள்கிறார்கள்.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 கன்ஃபார்மான 9 ஆண் போட்டியாளர்கள்.. ஆண்டவரை சந்திக்க தயாராகும் போட்டியாளர்கள்

மேலும் கதிரின் கடைக்கு வந்திருப்பவர்கள் அதே மாதிரி புரோட்டா எங்களுக்கு வேண்டும் என கூறுகிறார்கள். உடனே தனது மாஸ் ஸ்டைலுடன் கதிர் புரோட்டாவை போட ஆரம்பிக்கிறார். அதை அவர்களும் அப்படியே செல்லில் வீடியோ எடுத்து கொள்கின்றனர். சமைக்க சொன்னா என்ன வித்தை காட்டுகிறார் என மல்லி கதிரை திட்டுகிறார்.

இதனால் முல்லை கோபித்து மல்லி திட்டும்போது, நீங்க விட்ட சவாலில் இன்னும் 15 நாட்கள் தான் இருக்கிறது. அதற்குள் 50 ஆயிரத்தை சம்பாதிக்க வேண்டும் என்று கூறிவிட்டு மல்லி செல்கிறார். சாப்பாட்டை விட கதிரின் வித்தையை பார்ப்பதற்காகவே ஹோட்டலில் கூட்டம் அலைமோதும் என முல்லை நினைக்கிறார். எப்படியோ கல்லா கட்டினால் சரிதான்.

Also Read : பிளான் போட்டு சொதப்பிய பாரதி.. குடும்பத்தையே சிக்கலில் மாட்டிவிட்ட முட்டாள் டாக்டர்

Trending News