புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அண்ணனுக்காக பாண்டியனிடம் வக்காலத்து வாங்கும் கதிர்.. உருகி உருகி காதலிக்கும் ராஜி, சவால் விடும் செந்தில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் மற்றும் பழனிச்சாமி கடை விஷயமாக பேசிக் கொள்கிறார்கள். அப்பொழுது கோமதி வந்து, அங்கு ஒரு சைக்கிள் ரொம்ப நாளா கடந்துச்சி திடீர்னு இப்ப காணும் என்று சொல்கிறார். அதற்கு பழனிசாமி அந்த சைக்கிள் கதிர் எடுத்துட்டு போய் இருக்கிறான். அதாவது அவன் வைத்திருந்த பைக் அவனுடைய நண்பருடையது.

திடீரென்று அந்த பைக் வேணும் என்று கேட்டதால் கதிர் டெலிவர் பண்ணுவதற்கு இந்த சைக்கிளை கேட்டான். அதான் கொஞ்சம் அதை சரி பண்ணி அதன் மூலம் டெலிவரி பண்ணிட்டு வருகிறான் என்று பழனிச்சாமி சொல்லுகிறார். இதைக் கேட்டதும் கோமதி, சைக்கிள் மூலமா டெலிவரி பண்ணிட்டு வந்தால் ரொம்ப கஷ்டமாக இருக்குமே என்று புலம்புகிறார்.

சின்ராஸ் ஆக மாறும் செந்தில்

அதற்கு பாண்டியன், நானும் ஆரம்பத்தில் சைக்கிள் வைத்து தான் எல்லா வேலையும் பார்த்து இப்போ இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். அதனால அது ஒன்னும் பெரிய விஷயமாக பேச வேண்டாம். அவன் பண்ணுனதுக்கு இப்ப அனுபவிக்கிறான் என்று சொல்லிய நிலையில் கதிர் வீட்டுக்கு வருகிறார். வந்ததும் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, யாரும் என்னை நினைத்து கவலைப்படவும் வேண்டாம். நான் சைக்கிளை வைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.

எனக்காக எதையும் செய்ய வேண்டாம், ஆனால் பாவம் சரவணன் அண்ணனை கொஞ்சம் யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அண்ணி அண்ணனை கூட்டிட்டு இரண்டு நாள் வெளியிலே போக வேண்டும் என்ற ஆசைப்படுகிறார். அதனால் அவர்கள் இருவரையும் கொஞ்சம் வெளியே தனியாக அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும் என்று பாண்டியனிடம், அண்ணனுக்காக வக்காலத்து வாங்கி கதிர் பேசுகிறார்.

இது கேட்டதும் எதுவும் பேசாமல் பாண்டியன் வழக்கம் போல் முறைத்துக் கொண்டு உள்ளே போய்விடுகிறார். அடுத்ததாக மீனா, அப்பாக்கு வாங்கிய கிப்ட் அவரிடம் கொடுக்க முடியாததால் நீயே வைத்துக் கொள் என்று செந்தில் இடம் கொடுக்கிறார். அதற்கு செந்தில் அவருக்காக வாங்கினதை அவரிடமே கொடுப்போம் என்று மீனாவை கூட்டிட்டு மாமனார் வீட்டுக்கு போகிறார். வழக்கம் போல் மீனாவின் அப்பா மீனாவை பார்த்ததும் திட்டி வெளியே அனுப்பப் போகிறார்.

பின்னர் அழுது கொண்டே வரும் மீனாவுக்கு செந்தில் ஆறுதல் சொல்ல போகிறார். இதற்கிடையில் கதிர் சைக்கிளில் காலேஜுக்கு போகிறார். போகும் பொழுது பஸ்ஸுக்காக ராஜியும் பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருக்கிறார். பிறகு பஸ் வர லேட் ஆகிறது என்பதால் கதிரிடம் என்னையும் காலேஜில் ட்ராப் பண்ணிடு என்று கேட்கிறார். அதற்கு கதிர் முடியாது என்று கொஞ்சம் ஓவராக அலட்டியதால் ராஜி, கதிரை மடக்கி உனக்கு சைக்கிளில் டபுள்ஸ் வச்சு கூட்டிட்டு போக பயம் என்று ஒத்துக்கொள் என சொல்கிறார்.

உடனே கதிர் எனக்கா பயம் என்று ராஜியை சைக்கிளில் முன்னாடி வைத்து கூட்டிட்டு போகிறார். போகும் போது ராஜின் சித்தப்பா பார்த்து கதிரை மட்டம் தட்டி ராஜியை அசிங்கப்படுத்திவிட்டு போகிறார். பிறகு ராஜி, கதிரிடம் நம்மளும் படிச்சு முடிச்சிட்டு நல்ல வேலைக்கு போயிட்டு காரு வீடு வாங்கி இவங்க முன்னாடி எல்லாம் சந்தோஷமாக வாழ்ந்து காட்டணும் என்று மனதில் இருக்கும் காதலை வெளிப்படையாக காட்டி பேசுகிறார்.

அதே மாதிரி மீனாவின் அப்பா, ஆசைப்படுவது கவர்மெண்ட் மாப்பிள்ளை மருமகனாக வர வேண்டும் என்று தான். அதன்படி நான் கவர்மெண்ட் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணிட்டோம்னா எங்களை ஏற்றுக் கொள்வார். அதனால் நானும் எக்ஸாம் எழுதி கவர்மெண்ட் வேலைக்கு போகிறேன் என்று கதிரிடம் சவால் விடும் அளவிற்கு செந்தில் நம்பிக்கையுடன் பேசுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News