ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பாண்டியன் கடையில் கல்லாப்பெட்டியில் கையை வைத்த கதிர்.. செந்திலை அலறவிட்ட மீனா, எதுக்கும் உதவாத சரவணன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணன் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால் அண்ணனுக்கு உதவும் வகையில் கதிர் மற்றும் செந்தில் பணத்துக்காக அலைமோதி வருகிறார்கள். அந்த வகையில் கதிரிடமிருந்த காசு போக மீதி 11000 தேவைப்படுகிறது. அடுத்து செந்தில் மீதம் தேவைப்படும் பணத்தை மீனாவிடம் கேட்கலாம் என்று தயங்கிக் கொண்டு போய் பணம் கேட்கிறார்.

அப்படி கேட்கும் போது மீனா என்ன என்று கூட கேட்காமல் கையில் இருந்த ஏடிஎம் கார்டை கொடுத்து எவ்வளவு பணம் தேவையோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். அதற்கு காரணம் என்ன என்று செந்தில் சொல்ல வரும் பொழுது எனக்கு எந்த காரணமும் தேவையில்லை. உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மீனா கார்டை கொடுக்கிறார்.

அண்ணனுக்காக பாண்டியன் பணத்தை ஆட்டைய போட்ட கதிர்

செந்திலும் எதுவும் சொல்லாமல் கார்டை வாங்கிக் கொள்கிறார். ஆனால் போகும்பொழுது நன்றி சொல்லிவிட்டு சரவணன் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். அவனுக்காக தான் இந்த பணத்தை கேட்டேன் என்று சொல்லி தங்கமயில் ஹோட்டல் புக் பண்ணியது 26,000 என்பதையும் உளறி விடுகிறார். இதை கேட்டு ஆவேசமான மீனா அந்த ஹோட்டல் விவரத்தை ஃபோனில் செக் பண்ணி பார்க்கிறார்.

உடனே மீனா, இதை தானே நான் அன்னைக்கு சொன்னேன். யாருமே கண்டுக்காமல் தங்கமயில் சொல்வது தான் சரி என்பது போல் தலையை ஆட்டிக் கொண்டீர்கள். இப்பொழுது நான் உங்கள் அன்னிக்கு உதவி பண்ணனுமா? அதெல்லாம் முடியாது என்று சொல்லி செந்தில் இடம் கொடுத்த கார்டை புடுங்கி விடுகிறார். செந்தில் திருப்பி கேட்டதற்கு, இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு யாருக்கு என்ன உதவினாலும் கேளுங்க நான் எவ்வளவு நாளும் செய்ய ரெடியாக இருக்கிறேன்.

ஆனால் உங்க நொன்னிக்கு மட்டும் ஒரு பைசா கூட தர மாட்டேன் என்று செந்திலை அலறவிடும் அளவிற்கு மீனா கட்டன் ரைட்டாக பேசி விட்டார். பிறகு பழனிச்சாமி நண்பனின் மருத்துவ செலவுக்காக பணம் தேவைப்படுகிறது என்று கோமதி இடம் பணத்தை கேட்டு மன்றாடுகிறார். ஆனால் கோமதியும் அவ்வளவு பணம் என்னிடம் கிடையாது என்று சொல்லிவிட்டார்.

பிறகு பாண்டியன் போன் பண்ணி கடைக்கு வர சொல்லிய நிலையில் கதிர், பழனிச்சாமி மற்றும் செந்தில் அனைவரும் கடைக்கு போகிறார்கள். போனதும் பாண்டியனுக்கு வெளியில் வேலை இருப்பதால் போனை மறந்து வைத்துவிட்டு போய்விடுகிறார். அந்த நேரத்தில் கதிர், பாண்டியன் ஃபோனை எடுத்து 10,000ரூபாய் ட்ரான்ஸ்பர் பண்ணிக் கொள்கிறார். மீதம் 1000 தேவைப்படுகிறது என்று கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துட்டு போய் விடுகிறார்.

இது வேண்டாம் என்று செந்தில் தடுத்துப் பார்த்தாலும் கதிர் கேட்காமல் இந்த விபரீதமான முடிவை எடுத்து விட்டார். இதை எப்படியாவது சமாளித்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் கதிர் அண்ணனுக்கு உதவும் வகையில் பாண்டியனிடம் மாட்டிக் கொள்ளப் போகிறார். ஏற்கனவே கதிர் கடைக்கே வரமாட்டார், இப்பொழுது ஏன் வந்திருக்கிறார் என்று பாண்டியனுக்கு வந்த சந்தேகத்தில் இப்பொழுது கல்லாப்பெட்டியில் இருந்த பணமும் இல்லை, வங்கி கணக்கில் இருந்தும் பணம் கதிருக்கு போயிருக்கிறது என்பதும் பாண்டியன் கண்டுபிடித்து விடுவார்.

பிறகு வழக்கம்போல் எல்லா பிரச்சனைக்கும் கதிர் தான் காரணம் என்று பாண்டியன் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் முன்னாடியும் அர்ச்சனை செய்யப் போகிறார். ஆனால் இதை வேடிக்கை பார்க்க முடியாத ராஜி புருஷனுக்காக நடந்த விஷயத்தை சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. அப்பொழுதுதாவது தங்கமயில், பித்தலாட்டம் மருமகள் என்பது பாண்டியனுக்கு புரிகிறதா என்பதை பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Trending News