புதன்கிழமை, ஜனவரி 1, 2025

ராஜியின் கனவை நிறைவேற்ற தயாராகிய கதிர்.. மருமகள்களின் ஆசைக்கு கிரீன் சிக்னல் காட்டும் பாண்டியன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனுக்கு தெரியாமல் செந்தில் மற்றும் கதிர் கல்யாணம் பண்ணிட்டு வந்திருந்தாலும் வீட்டிற்கு வந்த இரண்டு மருமகளுமே குடும்பத்தை அனுசரித்து நல்ல மருமகளாகவும் பொறுப்பான மனைவியாகவும் தான் இருக்கிறார்கள். ஆனால் சரவணன் காதலுக்கு நோ சொல்லி நான் பார்த்து வைக்கிற பொண்ண தான் கட்டிக்க வேண்டும் என்று சொல்லியதால் தங்கமயிலை மருமகளாக கூட்டிட்டு வந்தார்.

ஆனால் அப்படி வந்த மருமகள் தான் பொய்யும் பித்தலாட்டமும் சொல்லி ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஏமாற்றும் விதமாக நடித்துக் கொண்டு வருகிறார்கள். இந்த உண்மை எல்லாம் பாண்டியனுக்கு தெரிய வரும் பொழுது தான் மீனா மற்றும் ராஜியின் அருமைகள் புரியும். அந்த வகையில் செந்தில் காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு வந்த மீனா அரசாங்க ஊதியத்தில் கௌரவமாக வேலை பார்த்து வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தாலும் பாண்டியன் குடும்பத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு மருமகளாகவும் மாமியாருக்கு அன்பான மருமகளாகவும் கணவருக்கு சப்போர்ட் பண்ணும் விதமாகவும் பல விஷயங்களில் இருக்கிறார். அதே மாதிரி கோமதி கட்டாயத்தினால் கல்யாணம் பண்ணிக் கொண்ட ராஜி மற்றும் கதிர் தற்போது ஒருவருக்கு ஒருவர் சப்போர்ட் பண்ணும் விதமாக ஆறுதலாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ராஜியின் கனவு போலீசாக வேண்டும் என்பது தான் என்ற விஷயம் கதிருக்கு தெரிந்து விட்டது. அதனால் ராஜியின் நம்பிக்கையை அதிகரித்து போலீஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று கதிர் முடிவு பண்ணி விட்டார். அதற்கு ஒரு சின்ன உதாரணமாகத்தான் கதிர், ராஜியின் வேகத்தை சோதித்துப் பார்க்கிறார். அதில் ராஜி நம்பிக்கையுடன் இருப்பதால் கதிர், ராஜியை போலீஸ் அதிகாரியாக ஆகிவிடலாம் என்று தீர்மானம் எடுத்துக் கொண்டார்.

அதனால் ராஜிடம் உன்னுடைய கனவை நிறைவேற்றும் விதமாக நீ செயல்படு உனக்கு பக்கபலமாக நான் இருப்பேன். உன்னுடைய அப்பா சித்தப்பா மற்றவர்கள் யாரும் தடுத்தாலும் பரவாயில்லை. நீ உன் லட்சியத்தில் சாதித்து காட்ட வேண்டும் என்று கூறுகிறார். அத்துடன் ஏற்கனவே பாண்டியன் எனக்கு வீட்டில் இருப்பவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் சேர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

அந்த வகையில் ராஜியின் ஆசையும் தெரிந்து கொண்டால் பாண்டியன் கிரீன் சிக்னல் கொடுத்து விடுவார். அத்துடன் முத்துவேல் மற்றும் சக்திவேல் முன்னாடி ராஜி அவருடைய கனவை நிறைவேற்றி போலீஸ் அதிகாரியாக ஜெயித்து விட்டால் அதுதான் அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த பதிலடியாக இருக்கும்.

Trending News