ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மளிகை கடையிலிருந்து வேறு தொழிலுக்கு மாறிய கதிர்.. அதிரடி திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இத்தொடரில் தற்போது கதிர் தனது மனைவி முல்லையுடன் தனிக்குடித்தனம் வந்துள்ளார். அவர்களுக்கு புத்தாடை மற்றும் சில பொருட்களை தனம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மூர்த்தியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் மளிகை கடை பெரிதும் பாதிக்கிறது. ஏனென்றால் இந்த கடையில் பெரும்பான்மையான வேலைகளை கதிர் தான் செய்து வருவார். எல்லா வீட்டுக்கும் பார்சல் கொடுப்பது, இல்லாத பொருட்களை நேரத்திற்கு வரவழைப்பது என எல்லாமே கதிர் உடைய வேலை தான்.

தற்போது கதிர் இல்லாததினால் இந்த கடை நஷ்டத்தை சந்தித்து வருகிறது. ஜீவாவால் மட்டும் கடையை நிர்வகிக்க முடியவில்லை. இதனால் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத மூர்த்தி இதை நினைத்து மேலும் கவலை கொள்கிறார். சரியான நேரத்தில் பொருள் கொடுக்க முடியவில்லை என்றால் கஸ்டமர்கள் போய்விடுவார்கள் என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதனால் தற்போது தனம் கடையை பார்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார். ஆனால் மூர்த்தி ஆரம்பத்தில் தடுக்கிறார். அதன்பிறகு குழந்தையை ஐஸ்வர்யா மற்றும் மீனாவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, மூர்த்தியையும் சமாதனம் செய்து தனம் கடைக்கு செல்கிறார்.

மறுபக்கம் கதிர் தன்னுடைய புதிய தொழிலுக்கு செல்ல உள்ளதாக முல்லையிடம் கூறுகிறார். அதாவது கடையில் கணக்கு எழுதுவது தான் வேலை என்று சொல்லிவிட்டு கதிர் செல்கிறார். ஆனால் ஒரு உணவகத்திற்கு கதிர் சென்று அங்கு காய்கறி வெட்டும் வேலையை பார்க்கிறார்.

இனிமேல் தனம் கடையை எடுத்து நடத்துவதால் தற்போது கடையின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது. கதிர் செய்யும் வேலை வேறு யாருக்காவது தெரியவந்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பூகம்பம் வெடிக்கும். இவ்வாறு பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் வர இருக்கிறது.

Trending News