வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ராஜி மனதிற்குள் லப்டப் அடிக்க வைத்து ரோமியோவாக மாறிய கதிர்.. மீனாவை பார்த்து ஜொள்ளு விடும் புருஷன்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், ராஜி எப்படியாவது கண்ணனை பார்த்து பணத்தையும் நகையும் வாங்கிவிடலாம் என்று விபரீத முடிவு எடுத்து திருச்சிக்குப் போனார். ஆனால் போன இடத்தில் விசாரித்து பார்த்தால் கண்ணன் எல்லாத்தையும் சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விட்டதாக நண்பர்கள் மூலம் தெரிய வந்துவிட்டது.

பிறகு போனதுக்கு பலன் ஒன்னுமே இல்லை என்பதற்கு ஏற்ப ராஜி திரும்பி வீட்டிற்கு வருகிறார். ஆனால் அதற்குள் வீட்டில் இருப்பவர்கள் ராஜியை காணும் என்று நாலா பக்கமும் தேடி அலைகிறார்கள். அந்த நேரத்தில் கதிர் கண்ணுக்கு ராஜி தென்பட்டு விடுகிறார். உடனே ராஜியை பார்த்து கதிர் ரொம்பவே கோபமாக பேசுகிறார். அதற்கு ராஜி, கண்ணனை பார்த்து எப்படியாவது பணத்தையும் நகையும் வாங்கிவிடலாம் என்று போனேன் என சொல்கிறார்.

அப்பொழுது கதிர் ரொம்பவே கோபமாக கண்ணன் எவ்வளவு ஒரு முரடன் கெட்டவன் என்று தெரிந்தும் தனியாக போய் பிரச்சனையே இழுக்க பார்த்தாய் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா என்று திட்டி விட்டார். மேலும் இனிமேல் இதே மாதிரி எந்த ஒரு பிரச்சனையும் பண்ணாமல் ஒழுங்காய் இருக்கிறதா இருந்தால் என்னுடன் வீட்டுக்கு வா என கூட்டிட்டு போகிறார்.

Also read: முத்து மூலம் மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்.. மனோஜ்க்கு தெரிய வந்த ரோகினியின் லீலைகள், இதுக்கே இப்படியா!

போனதும் வீட்டில் இருப்பார்கள் எங்கே போனாய் என்று கேட்டதும் பிரண்ட்ஸ் வீட்டுக்கு போயிட்டு வந்தேன் போன் பண்றதுக்கு என்னிடம் ஃபோன் இல்லை நம்பரும் தெரியாது என சொல்லிவிட்டார். அந்த நேரத்தில் கடைக்குட்டி தங்கை எங்க அண்ணன் நம்பரும் உங்களுக்கு தெரியாதா என்று சரியான பாயிண்ட் வைத்து கேட்டார். அப்பொழுது முந்திரிக்கொட்டை மாதிரி வழக்கம் போல் மீனா சரி சரி கொஞ்சம் போய் எல்லாரும் ரெஸ்ட் எடுங்க என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.

இதனை தொடர்ந்து மீனா வீட்டிற்குள் இருக்கும் பொழுது செந்தில் ரொமான்ஸ் எண்ணத்தில் ஜொள்ளு விட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். இதை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார் ராஜி. இடைப்பட்ட நேரத்தில் ராஜி காணவில்லை என்றதும் கதிர் மனதிற்குள் இணை புரியாத பிரியம் வந்துவிட்டது. அத்துடன் ராஜு மனதிற்குள்ளும் கதிரை பற்றி நல்ல அபிப்பிராயம் வந்தவுடன் மனதிற்குள் காதலும் பூத்து விட்டது.

அந்த வகையில் கூடிய சீக்கிரத்தில் ராஜிக்கு ரோமியோவாக கதிர் காதலை வெளிப்படுத்தப் போகிறார். இப்பவே ராஜிக்கு லப்டாப் அடித்து கதிரை பிடிக்க ஆரம்பித்து விட்டது. தற்போது இவர்களுடைய ரொமான்ஸ் ரொம்பவே நன்றாக இருக்கிறது என்பதற்கு ஏற்ப இந்த நாடகத்தை தொடர்ந்து பார்த்து ஆதரவை கொடுத்த வருகிறார்கள்.

Also read: தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட ரோகிணி.. ஓவரா குதிக்கும் விஜயா,பிளாக்மெயில் பண்ணும் முத்து

Trending News