Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரனின் ஆணவத்தை யாராலையும் அடக்க முடியாது என்று தெனாவட்டிலிருந்து குணசேகரனுக்கு கதிர் சரியான நாமத்தை போட்டு விட்டார். வீட்டில் இருந்தால்தானே சொத்து பிரச்சினையை கேட்டு தொந்தரவு செய்வார்கள் என்று கதிர் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகிவிட்டார். அதனால் குணசேகரன், பையன் கல்யாணத்துக்கு வாங்குன பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் வீட்டிற்கு வந்த ஜோசியர், இந்த குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், வாரிசுகள் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் வீட்டை விட்டுப் போன மருமகள் ராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்தால் மட்டும் தான் எல்லாம் நினைத்தபடி நடக்கும் என்று கூறிவிட்டார். அட்லீஸ்ட் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களாவது பரிகாரம் செய்யப் போனும் என்று சொல்லி விட்டார்.
அத்துடன் கதிரால தான் இந்த குடும்பத்திற்கு பிரச்சினை வரும் என்று சொல்லி இதற்கெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்றால் உங்கள் மருமகள்கள் ராமேஸ்வரம் போயிட்டு தீர்த்தத்தை கொண்டு வீட்டிற்கு வந்தால் தான் எல்லாம் சரியாகும் என்று சொல்லிவிடுகிறார். இதனால் வேற வழி இல்லாமல் விசாலாட்சி, மருமகளை சந்தித்து பேச போகிறார். வீட்டை விட்டு தெனாவட்டாக போங்க என்று சொல்லிய விசாலாட்சி தற்போது வேறு வழி இல்லாமல் ஈஸ்வரிடம் கெஞ்சும் படியான சூழ்நிலை அமைந்து விட்டது.
அதனால் ஈஸ்வரி ரேணுகா மற்றும் நந்தினி மூன்று பேரும் சேர்ந்து ராமேஸ்வரத்தில் பரிகாரம் செய்ய போகிறார்கள். இதற்கிடையில் ரோட்டில் நிற்கும் மருமகள்கள் ஜீவானந்த இடம் உதவி கேட்டு நிற்கிறார்கள். அந்த வகையில் ஜீவானந்தம் இவர்களுக்கு வீடு பார்த்து கொடுக்கப் போகிறார். அடுத்ததாக சக்தியை சந்தித்து பேசுவதற்காக மன்றம் டெக்கரேஷனுக்கு ஜனனி போகிறார்.
அங்கே போன இடத்தில் குந்தவை பார்த்த ஜனனி கோபமாகி விடுகிறார். உடனே சக்தியை சந்தித்து பேச வேண்டும் என்று வாசலில் காத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் சக்தி போன் பண்ணாமல் ஏன் வந்தாய் என்று கேட்கிறார். அதற்கு ஜனனி உனக்கு நான் போன் பண்ணினேன் போகவில்லை. அதனால் தான் நேரடியாக வந்துவிட்டேன் என்று சொல்கிறார். அப்பொழுது குந்தவை உள்ளே வந்து பேசுங்க என்று எதார்த்தமாக சொல்லியதால் ஜனனி கோபப்படுகிறார்.
இதனால் சக்தி ஜனனி இரண்டு பேருக்கும் நடுவில் விரிசல் ஏற்பட போகிறது. இந்த விரிசலில் குளிர் காயும் விதமாக குந்தவை நல்லவிதமாக சக்தியிடம் பேசி சக்தி மனசை மாற்றவும் வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த குந்தவை வெளியே நல்லபடியாக பேசினாலும் உள் மனசுக்குள் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் வந்திருப்பது போல் இருக்கிறது. இதை சக்தி புரிந்து கொள்ளாமல் ஜனனிடம் பொய் சொல்லி தற்போது மாட்டிக்கொண்டார். இதிலிருந்து ஜனனி எப்படி சக்தியை காப்பாற்றப் போகிறார் என்பதன் அடுத்து வரப்போகும் கதையாக இருக்கும்.