புதன்கிழமை, மார்ச் 12, 2025

எதிர்நீச்சல் 2 சீரியலில் வில்லாதி வில்லனாக குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் கதிர்.. ஞானத்தை வைத்து போட்ட தூண்டில்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், ஐஸ்வர்யாவை காணவில்லை என்று ஒட்டுமொத்த குடும்பமும் தேடிக்கொண்டு அலைகிறார்கள். ஆனால் இந்த விஷயம் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு தெரிந்து விட்டால் இதை வைத்தே வீட்டில் பிரச்சினைகளை உண்டாக்குவார்கள் என்பதால் ரேணுகா நந்தினி மற்றும் ஈஸ்வரி அனைவரும் சேர்ந்து ஞானத்திடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார்கள்.

அப்பொழுது கதிர் வீட்டுக்கு வந்த நிலையில் தாரா ஐஸ்வர்யா மற்றும் தர்ஷினி என மூன்று பேருக்கும் சாக்லேட் வாங்கிட்டு வந்து தாராவிடம் கொடுக்கிறார். அதற்கு தாரா, அப்பா என்று கூப்பிட்டு கதிரிடம் விஷயத்தை சொல்லப் போகிறார். ஆனால் சொல்ல விடாமல் தடுப்பதற்கு நந்தினி, தாராவை கூப்பிட்ட நிலையில் கதிர் என்னாச்சு என்று கேட்கிறார்.

உடனே தாரா, ஐஸ்வர்யா அக்கா ஸ்கூலுக்கு போய்விட்டு இன்னும் வீட்டுக்கு வரவில்லை. ஜனனி சித்தி, சக்தி சித்தப்பா சேர்ந்து தேடிக் கொண்டிருக்கிறார்கள் என சொல்கிறார். உடனே பொங்கி எழுந்த கதிர், ஞானம் வந்ததும் உனக்கு மகளைக் காணவில்லை என்று கொஞ்சம் கூட அக்கறையே இல்லையா? எதுவும் நடக்காத போல் இப்படி இருக்கிறாய் என்று திட்டி விடுகிறார்.

அதன் பிறகு தான் ஞானத்திற்கு தெரிகிறது ஐஸ்வர்யாவை காணவில்லை என்று. உடனே இதற்கு காரணம் ரேணுகா தான் என்று ரேணுகாவை அடித்து விடுகிறார். அதாவது எப்படி இருக்கிறது என்றால் வீட்டில் ஒரு குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதற்கு முழு பொறுப்பும் அம்மா தான் என்று மொத்த பழியையும் அம்மா மேல போடுவது தான் வழக்கமாக இருக்கிறது என்று காட்டப்பட்டு இருக்கிறது.

அதுபோலவே ஞானமும் இதற்கெல்லாம் காரணம் நீ தான், வீட்டில் சும்மா இருந்து கொண்டே பிள்ளை என்ன பண்ணுது, ஏது பண்ணுது எங்க போகிறது என்று பார்க்க முடியாதா என்று வாய்க்கு வந்தபடி திட்டி விடுகிறார். பிறகு கதிர் கரிகாலன் மற்றும் ஞானம் அனைவரும் சேர்ந்து ஐஸ்வர்யாவை தேட கிளம்பி விட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கதிர், ஞானத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக சக்தியை பற்றி தவறாக சொல்லிவிடுகிறார்.

அதோடு மட்டுமில்லாமல் நீ என்னுடன் சேர்ந்து விட்டால் நமக்கு சுயமரியாதை கிடைப்பதற்கு நான் எல்லா வழிகளையும் பண்ணுகிறேன் என்னை நம்பு என்று ஞானம் காலில் விழுந்து டிராமா போட்டு விடுகிறார். இந்த புத்தி கிட்ட ஞானமும் கதிர் நல்லவன் என்று கை கொடுக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் இந்த கதிர் வில்லாதிக்கு வில்லன் என்று சொல்வதற்கு ஏற்ப ஞானம் சேர்ந்ததும் சாதிச்சது போல் சிரித்துக் கொள்கிறார்.

இன்னும் இந்த கதிர் என்னவெல்லாம் பண்ண காத்துக் கொண்டிருக்கிறார். இந்த கதிரை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது குணசேகரன் எவ்வளவோ பரவாயில்லை என்பது போல் தோன்றுகிறது. அந்த அளவிற்கு குடும்பத்தில் இருப்பவர்களை வைத்து பரமபதம் ஆடி வருகிறார். இதையெல்லாம் தொடர்ந்து ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து மனசு சரியில்லை என்று மாடியில் தூங்கிக் கொண்டிருப்பதை வீட்டில் இருப்பவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

உடனே ரேணுகா போன உசுரு மறுபடியும் திரும்பி வந்தது போல் ஐஸ்வர்யாவே அடித்து காலில் விழுந்து இனி எந்த காரணத்தை கொண்டும் என்னை தவிக்க விட்டு போகாதே என பாசத்தை கொட்டுகிறார். ஆனால் இதையும் தவறாக புரிந்து கொண்ட குணசேகரின் அம்மா ரேணுகாவை திட்டி விடுகிறார். பிறகு தர்ஷன் கல்யாணத்தில் எந்தவித பிரச்சனையும் பண்ணாமல் கல்யாணத்தை நல்லபடியாக நடத்த விட வேண்டும் என்று விசாலாட்சி சொல்கிறார்.

இதை கேட்டதும் ஜனனி முடியாது என்று சொல்லிய நிலையில் அப்படி என்றால் இந்த வீட்டை விட்டு வெளியே போய் விடுங்கள் என்று அதிரடியாக பேசி விடுகிறார். இதனால் நான்கு பெண்களும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இப்படி இருக்கும் பட்சத்தில் கதிர் அவருக்கு தேவையான விஷயத்தை கமுக்கமாக இருந்து சாதித்துக் கொள்கிறார். அந்த வகையில் ஞானத்துக்கு போட்ட தூண்டிலில் ஞானம் சிக்கிக் கொண்டார்.

Trending News