வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கதிர் போட்ட கணக்கு சரியா வந்துடுச்சு.. ஜெயிச்சுட்ட மாறா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் சமீபத்தில் கதிர் ஹோட்டல் தொடங்கி இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதங்களை நெருங்கிய நிலையிலும் ஒரு ரூபாய் கூட கதிரால் லாபம் எடுக்க முடியவில்லை.

இதனால் முல்லையின் அம்மா மற்றும் அக்கா மல்லி இருவரும் கதிரை கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள். ஆனால் எதற்கும் தளராத கதிர் தொடர்ந்து கடையை லாபத்தில் கொண்டு செல்ல பல முயற்சிகள் எடுத்து வருகிறார். ஆனால் எல்லாமே தோல்வியை தான் சந்தித்து வருகிறது.

Also Read :களை கட்டும் பிக் பாஸ் சீசன் 6.. உறுதியான 6 போட்டியாளர்கள்

இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத அளவு ஒரு முக்கிய முடிவை கதிர் எடுத்திருந்தார். அதாவது அடுத்த இரண்டு நாட்களுக்கு இலவசமாக பிரியாணி போடுவதாக போர்டு வைத்துள்ளார். இந்த விஷயம் முல்லைக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. ஆனால் கதிர் இதில் நம்பிக்கை ஆக இருக்கிறார்.

நம்முடைய சாப்பாடு நன்றாக இருக்குமா என்ற பயத்தில் தான் மக்கள் ஹோட்டலுக்கு வர தயங்குகிறார்கள். கண்டிப்பாக நமது சாப்பாட்டை சாப்பிட்டு பார்த்தால் திரும்ப திரும்ப ஹோட்டலுக்கு வருவார்கள் என்ற எண்ணத்தில் கதிர் இந்த ஏற்பாடு செய்திருந்தார். ஹோட்டலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Also Read :நேர்மைக்கு பெயர் போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இப்படி ஒரு தம்பியா? தலைகுனிய போகும் குடும்பம்

ஆனால் ஹோட்டலில் உள்ள உண்டியலில் யாரும் காசு போடாததால் சுத்தமாக நஷ்டம் என உண்டியலை தூக்கி முல்லையின் அம்மா கீழே போடுகிறார். அதில் உள்ள பணம் எங்கு பார்த்தாலும் சிதறுகிறது. அதன் பிறகு கணக்குப் பார்த்தால் 18000 இருக்கிறது. இன்று தான் செலவு போக லாபத்தை கதிர் பார்த்து உள்ளார்.

இதனால் கதிர் மற்றும் முல்லை இருவருமே சந்தோஷமாக உள்ளனர். அதுமட்டுமின்றி முல்லையின் அப்பா மல்லி மற்றும் முல்லையின் அம்மாவை கிண்டலடித்து பேசுகிறார். இத்தனை நாள் போட்ட உழைப்புக்கு கிடைத்த வெற்றி, சூரரைப் போற்ற சூர்யா போல் ஜெயிச்சுட்ட மாறா என்ற தோரணையில் கதிர் உள்ளார்.

Also Read :பிக்பாஸ் மூலம் கிடைத்த ஜாக்பாட்.. சினிமாவில் அசத்தல் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்

Trending News