புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025

எதிர்நீச்சல் 2 இல் சீரியலில் குணசேகரனின் கதையை க்ளோஸ் பண்ண கதிர் போட்ட திட்டம்.. ஜனனி வைத்த செக்

Ethirneechal 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், ஆணாதிக்கம் பண்ணி பெண்களை அடிமையாக்க நினைத்த குணசேகரனை நான்கு பெண்களும் சேர்ந்து ஜெயிலுக்கு அனுப்பினார்கள். இதனால் வெளியே வர முடியாமல் இருந்த குணசேகரனுக்கு போஸ்டர் பெரியசாமி கொடுத்த ஐடியாவின் படி தற்போது வெளியே வந்து விட்டார். அந்த வகையில் இவர்கள் இருவரும் சம்பந்தி ஆகலாம் என்று முடிவு எடுத்த நிலையில் தர்ஷன் மற்றும் போஸ்டர் பெரியசாமியின் இளைய மகள் அன்புக்கரசிக்கு திருமணம் நடைபெற போகிறது.

இந்த திருமணத்தை தடுக்க நினைக்கும் நான்கு பெண்களுக்கு தற்போது கிடைத்திருக்கும் இன்னொரு விஷயம் என்னவென்றால் தர்ஷன், பார்கவி என்ற பெண்ணை காதலித்து ஏமாற்றி இருக்கிறார் என்பதுதான். அதனால் இதன் மூலம் தர்ஷன் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி பார்க்கவியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார்கள். அந்த வகையில் தர்ஷன் மற்றும் பார்க்கவிக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைத்து விடுவார்கள்.

இதற்கு இடையில் ஜெயிலிலிருந்து வந்த குணசேகரை எப்படியாவது மறுபடியும் உள்ளயே அனுப்பி வைக்க வேண்டும் என்று கதிர் திட்டம் போட்டு இருக்கிறார். ஏனென்றால் வெளியே குணசேகரன் இருந்தால் கதிர் உடைய பிளான் எதுவும் நிறைவேறாது. சொத்தையும் அனுபவிக்க முடியாது என்பதால் குணசேகருக்கு தெரியாமலேயே சூழ்ச்சி பண்ணி பெண்களை பகடைக்காயாக வைத்து குணசேகரன் நிரந்தரமாக ஜெயிலில் இருக்கும்படி திட்டம் போட்டிருக்கிறார்.

அதன்படி வீட்டுக்கு வந்த குணசேகருக்கு ஆரத்தி எடுக்க சொல்லி நந்தினியை கதிர் டார்ச்சர் செய்கிறார். ஏற்கனவே இந்த நான்கு பெண்களுக்கும் ஏதாவது ஒரு சின்ன கஷ்டம் வந்தாலும் அதற்கு குணசேகரன் தான் காரணமாக இருப்பார். அப்படி இருக்கும் பட்சத்தில் குணசேகரனின் பரோல் கேன்சல் ஆகிவிடும் நிரந்தரமாக மறுபடியும் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலைமை ஆகிவிடும் என்பதன் அடிப்படையில்தான் வெளியே வந்திருக்கிறார்.

இதை தெரிந்து கொண்டும் கதிர், குணசேகருக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பண்ணி பெண்களை துன்புறுத்தி அவர்களின் ஒட்டுமொத்த கோபத்தையும் குணசேகரன் மீது திருப்புவதற்கு சதி பண்ணுகிறார். இது தெரியாத குணசேகரன் தன் தம்பியின் பாசத்தையும் பெண்களை எப்படி அடக்குமுறை செய்கிறார் என்பதையும் பார்த்து பூரித்து போய்விடுகிறார். ஆனால் நம்ப வைத்து காலை வாரி விடப் போகிறார் என்பது இப்போதைக்கு குணசேகருக்கு புரிய போவதில்லை.

ஆனாலும் தற்போது ஜனனி நோக்கம் யாரையும் பழிவாங்க வேண்டும் என்பது இல்லை, சுமூகமாக இருந்து தர்ஷன் அன்புக்கரசி கல்யாணத்தை நிறுத்தி பார்க்கவியை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்பதுதான். இப்படி ஒரு செக் வைத்து விட்டால் குணசேகரன் நினைத்தபடி வெளியே இருக்கவும் முடியாது, கதிர் ஆசைப்பட்ட மாதிரி தர்ஷனை ஒதுக்கவும் முடியாது என்பதற்காக ஜனனி ஒரே கல்லில் இரண்டு மாங்காவுக்கு குறி வைத்து விட்டார்.

Trending News