திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

என்ன மேட்டர் பண்ணிட்டான்.. டபுள் மீனிங் வசனத்தில் No.1 ட்ரெண்டிங்கில் காத்துவாக்குல 2 காதல் ட்ரைலர்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. ஏற்கனவே படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இந்த ட்ரெய்லர் இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ட்ரெய்லர் ஆரம்பிக்கும்போதே குஷி படத்தில் வருவது போன்று அணையப் போகும் விளக்கை காப்பாற்ற ஹீரோயின்கள் வரும் போது எதிர்பாராத ட்விஸ்ட்டாக விஜய் சேதுபதியும் சேர்ந்து கொள்கிறார். இந்த காட்சியே படத்தின் கதை என்ன என்று சொல்லி விடுகிறது.

அதில் தொடங்கி பாகுபலி, டைட்டானிக் போன்ற படங்களில் இடம்பெற்ற ஹிட் காட்சிகளும், வலையோசை பாடல் காட்சிகளும் பார்க்கும்போது படம் பக்கா என்டர்டைன்மென்ட்டாக இருக்கும் என்று தெரிகிறது. அதிலும் நடனத்தில் கலக்கிய கலா மாஸ்டரை இதில் நாதஸ்வர வித்வானாக காட்டியிருப்பதும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மேலும் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா பேசும் ரவுடி கிட்ட கூட்டிட்டு போக முடியுமா என்ற டயலாக் இதிலும் ரசிக்கப்படுமா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும். குடும்ப குத்து விளக்காக நயன்தாராவும், அல்ட்ரா மாடர்னாக சமந்தாவும் வரும் காட்சிகள் நிச்சயம் ரசிக்கப்படும்.

அதிலும் சமந்தா பேசும் டபுள் மீனிங் வசனங்கள் நிச்சயம் ஒரு சர்ச்சையை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை. இரண்டு காதலியிடமும் மாட்டிக்கொள்ளும் விஜய் சேதுபதி அவர்களை சமாதானப்படுத்த இறுதியாக டீ, காபி இரண்டையும் கலந்து அடிக்கும் அந்த காட்சி ரசிக்கும்படியாக இருக்கிறது.

இப்படி அசத்தலாக வெளிவந்திருக்கும் இந்த ட்ரைலரை பார்க்கும் போது படத்தில் காமெடிக்கும், கலகலப்புக்கு பஞ்சமிருக்காது என்று தெரிகிறது. ஆகமொத்தத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் ஒரு ஜாலியான படத்தை பார்த்து ரசிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

Trending News