Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரி இருக்கும் இடத்திற்கு சிட்டுக்குருவி போல் பறந்து விஜய், காதல் லீலைகளை செய்து வருகிறார். அந்த வகையில் கங்கா மற்றும் குமரன் ஆரம்பிக்கும் கடைக்கு மாடலிங் விஷயமாக காவிரி போயிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட விஜய் அங்கே சென்று சில அட்ராசிட்டிகளை பண்ணுகிறார்.
அதாவது மாடலிங் விளம்பரம் பார்த்தேன் அதில் நான் நடிக்க வந்தேன் என்று சொல்கிறார். உடனே அங்கு இருப்பவரும் விஜயை பார்த்து இவர் மாடலிங்கை விட ஹீரோ மாதிரி இருக்கிறார் என்று புகழ்கிறார். இவரே மாடலிங் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லும் பொழுது காவிரி அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை என்று சொல்கிறார்.
அப்பொழுது கங்கா, விஜய்யை பார்த்து உங்களுக்கு என்ன தான் வேணும் என்று கேட்கிறார். உடனே விஜய் எனக்கு உங்க தங்கச்சி காவேரி தான் வேணும். அவள் இல்லாத வாழ்க்கை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது தயவு செய்து என்னுடைய ஃபீலிங்ஸ் புரிந்து கொள்ளுங்கள் என்று பொண்டாட்டிக்காக மன்றாடுகிறார். உடனே காவிரி மற்றும் விஜய் செல்ல சண்டைகள் போட்டு வெளியே கிளம்பி விடுகிறார்கள்.
வெளியே வந்த பிறகும் விஜய்யிடம் காவிரி செல்லமாக சண்டை போட்டு வீட்டை விட்டு காலி பண்ணுங்க. எங்க அம்மாவை கடுப்பேத்தாதீர்கள், எங்க அம்மா என்ன சொல்றாங்கோ அதுதான் நான் செய்வேன் என்று தேய்ந்து போன டேப்ரிகார்ட் போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் விஜய், காவிரி விட்டு போகாமல் பின்னாடியே தான் சுற்றுகிறார்.
அந்த வகையில் காவேரி பாட்டியை விஜய் கவுத்து விட்டார். அதே மாதிரி கங்கா மற்றும் குமரனும் விஜய் பக்கம் தான் இருக்கிறார்கள். இருந்தாலும் சாரதாவுக்கு தெரிந்தால் ஏதாவது பிரச்சனையாகும் என்ற பயத்தில் எல்லோரும் அமைதியாக இருந்து விஜய்யை வெறுக்கிற மாதிரி நடித்து வருகிறார்கள். காவேரி அப்படித்தான் நடிக்கிறார், விஜய் வீட்டில் லைட் இல்லை, ஆளும் காணும் என்ற பயத்தில் காலி பண்ணி விட்டாரோ என்ற நினைப்பில் ஓனரிடம் விஜய் பற்றி கேட்கிறார்.
அந்த நேரத்தில் விஜய் வந்து விட்டதால் காவேரி வெட்கத்தில் உள்ளே போய்விடுகிறார். பிறகு காவேரி நம்மளை பற்றி தான் விசாரித்து இருக்கிறார் என்று தெரிந்ததும் விஜய் சந்தோஷப்பட்டு கொள்கிறார். அடுத்ததாக அடுப்பாங்கறையில் கங்கா சமைத்துக் கொண்டிருக்கும் போது குமரன் உதவிக்காக போகிறார். அப்பொழுது இரண்டு பேரும் கொஞ்சம் ரொமான்ஸ் பண்ண ஆரம்பித்த பொழுது காவிரி அதை பார்த்து விஜய்யிடம் நாம் ரொமான்ஸ் பண்ணினால் எப்படி இருக்கும் என்று பகலிலே கனவு கண்டு பரிதவித்து நிற்கிறார்.
அந்த வகையில் விஜய் மற்றும் காவேரி, காதலுக்கு மட்டுமில்லை ரொமான்ஸுக்கும் மன்மத லீலைகள் என்பதற்கு ஏற்ப விஜய்யும் காவிரியிடம் ரொமான்ஸில் பிச்சு உதறுகிறார். இரண்டு பேரும் அவ்வப்பொழுது இப்படி ரொமான்ஸ் பண்ணி கனவிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இதில் குறுக்கே நிற்கும் சாரதா மட்டும் விஜயை புரிந்து கொண்டால் இவர்களுடைய காதலுக்கு யாரும் இடைஞ்சலாக இருக்க முடியாது.