வெள்ளிக்கிழமை, மார்ச் 14, 2025

மகாநதி சீரியலில் வெண்ணிலா பிரச்சினைக்கு முடிவு கட்டிய காவேரி.. சாரதா மனசை மாற்ற போகும் விஜய்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் மற்றும் காவிரி கல்யாணம் பண்ணியதில் இருந்து இப்பொழுது தான் உருப்படியான ஒரு விஷயம் செய்திருக்கிறார்கள். அதாவது இரண்டு பேருடைய மனதிலும் காதல் இருந்த நிலையில் அதை வெளிப்படுத்தாமல் அலட்சியப்படுத்தினால் தற்போது இரண்டு பேருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இதை சரி செய்யும் விதமாக காவேரி மற்றும் விஜய் இரண்டு பேரும் மனம் விட்டு பேசி ஒருவரே ஒருவர் புரிந்து கொண்டு பிரச்சனைக்கான காரணம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அந்த வகையில் காவிரி பொருத்தவரை வெண்ணிலாவுக்கு குணமானதும் வெண்ணிலா மனசில் என்ன நினைக்கிறாங்க, நீங்க எந்த அளவுக்கு அவங்களுக்கு நம்பிக்கையை கொடுத்து இருக்கிறீங்க, நம்ம கல்யாணத்தை அவங்க எப்படி எடுத்துக்கிறாங்க என்பதை எல்லாம் நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்பொழுதுதான் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும், உங்களுடனும் சந்தோசமாக வாழ முடியும். இதற்கு வெண்ணிலா குணமாக வேண்டும், அதற்காக உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை, இருந்தாலும் என்னுடைய திருமண வாழ்க்கையை நான் முழு மனதோடு ஏற்க வேண்டும் என்றால் உங்களை நம்பி இருக்கும் வெண்ணிலா முழுமையாக குணமடைந்து அவருக்கான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது நடந்து விட்டால் நிச்சயம் நாம் இரண்டு பேரும் சந்தோஷமாக இருந்துவிடலாம் என்று சொல்லுகிறார். உடனே விஜய், வெண்ணிலாவுக்கு சரியாகவில்லை என்றால் என்ன பண்ணுவது என்று கேட்கிறார். காவேரி, நிச்சயம் வெண்ணிலா சரியாகி விடுவாங்க. அதே நேரத்தில் எங்க அம்மா மனசிலும் நான் உங்களுடன் வாழ்ந்தால் நிம்மதியாக இருப்பேன் என்ற நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.

அதற்கு விஜய், நிச்சயம் உங்க அம்மா நம்ம காதலை சேர்த்து நம்மளுடைய கல்யாணத்தையும் மனதார ஏற்றுக்கொண்டு அவங்களே நம்மளை ஒன்று சேர்த்து வைப்பார் என்று சொல்கிறார். அந்த வகையில் ராகினி தொந்தரவையும் சமாளித்து வெண்ணிலவையும் சரி செய்து சாராத மனசையும் மாற்ற போகிறார்கள். ஆனால் அதுவரை இரண்டு பேரும் காதலித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

Trending News